- Advertisement -
ஒருமுறை நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, ஒரு தயாரிப்பாளர் எனக்கு நல்ல நண்பர். ஒருமுறை அவரை சந்தித்த போது மிகவும் சோகமாக இருந்தார். எப்பவுமே என்னை பார்த்ததும் கலகலப்பாக பேசுவார். என்னாச்சு என்று அவரிடம் விசாரித்தேன். காலையில் 30 ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்றார். எப்படி என்று கேட்டேன். தலையில் விக் இருப்பது தெரியாமல் சலூன் கடைக்கு போயிட்டேன். அவனும் விக்குக்கு ஹேர்கட் பண்ணி விட்டுட்டான். வேண்டாம் என்று சொன்னால் அவனுக்கு 800 ரூபாய் லாஸ் ஆகுமே என்று நானும் ஒண்ணும் சொல்லாமல் விட்டுட்டேன். 30 ஆயிரம் ரூபாய் விக் போச்சு என்றார். இப்போ அந்த விக்கை தான் வெச்சுட்டு வந்திருக்கேன் என்றார். அவரை நாங்கள் ‘விக்கு’ னேஸ்வரன் என்று கூப்பிடுவோம் என்று தேவா ஜாலியாக பேசியிருக்கிறார்.





