- Advertisement -
தமிழ் சினிமாவில் புதிய படங்களுக்கு காலை 6 மணி முதல் காட்சிகள் என்ற தமிழ அரசின் அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த அக்டோபர் 15ம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் வெளியானது. அப்போது இந்த அறிவிப்பு வெளிவரவில்லை. அப்படி வந்திருந்தால் ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் வசூல் பலமடங்கு அதிகரித்திருக்கும். முதல் வார வசூல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். குறிப்பாக ஜெயிலர் 2 படம் எப்போதோ 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளி இருக்கும். இதற்கு முன்பே தியேட்டர் உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை அரசுக்கு வைத்திருந்தனர். அப்போது இந்த உத்தரவை அரசு வெளியிடவில்லை. தீபாவளிக்கு நயன்தாரா சூர்யா நடித்த படங்கள் வரும்போது இப்போது அறிவித்துள்ளனர். தமிழக முதல்வர் விஜயின் காழ்ப்புணர்ச்சிதான் இதற்கு காரணம் என்று ரஜினி ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.





