- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருநெல்வேலியில் நடந்த படப்பிடிப்பு… வீட்டுக்கு அழைத்த ரசிகர் - காமெடி நடிகர் விவேக் செய்த...

திருநெல்வேலியில் நடந்த படப்பிடிப்பு… வீட்டுக்கு அழைத்த ரசிகர் – காமெடி நடிகர் விவேக் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் திரிஷா விவேக் மனோரமா ரமேஷ் கிருஷ்ணா வெண்ணிற ஆடை மூர்த்தி டெல்லி கணேஷ் தியாகு உள்ளிட்டோர் நடித்த படம் சாமி. இந்த படம் விக்ரமுக்கு மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை தந்த படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்தது.

அப்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தான் இது. இந்த படத்தில் புரோகிதம் செய்யும் ஐயர் கேரக்டரில் நடிகர் விவேக் அசத்தலான காமெடி ரோலில் நடித்திருந்தார். பல காட்சிகளில் நல்ல கருத்துகளை சொல்லியிருப்பார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் விவேக் நடித்துக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போது, சார் எங்க வீட்டுக்கு காபி சாப்பிட வருவேளா என்று வெள்ளந்தியாக அந்த தெருவில் இருந்த ரசிகர் ஒருவர் விவேக்கிடம் கேட்டிருக்கிறார். அவ்வளவுதானே? வாங்க போவோம் என்று அப்போதே அவருடன் விவேக் கிளம்பி வந்து விட்டார். விவேக்கை வீட்டுக்கு அழைத்த ரசிகருக்கு தலைகால் புரியவில்லை.

வீட்டுக்கு வந்த நடிகர் விவேக்தை உட்கார வைக்க வீட்டில் ஒரு நாற்காலி பெஞ்ச் கூட இல்லாத ஒரு ஏழ்மையான நிலையில் வாழும் ரசிகர் அவர். தினமும் போண்டா வடை பஜ்ஜி என பலகாரங்கள் செய்து ஊர் முழுவதும் விற்பதுதான் அந்த ரசிகரின் தொழில். ஆனால் எந்த பந்தாவும் இல்லாமல் சகஜமாக அவர் வீட்டில் இருந்த ஒரு காலி எண்ணெய் டின்னில் மீது அமர்ந்து கொண்டு ஒரு காபியும், ரெண்டு பஜ்ஜியும் நடிகர் விவேக் சாப்பிட்டார்.

- Advertisement -

அதன் பிறகு நடிகர் விவேக், வறுமையிலும் செம்மையாக உங்கள் விருந்தோம்பல் பண்புக்கு நான் விசிறியாக மாறிவிட்டேன், உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கலாமா? என்று தன்னை அழைத்த அந்த ரசிகருடன் ஒரு போட்டோவும் எடுத்திருக்கிறார் விவேக். மேலும் அடுத்தடுத்த நாட்களில் சாமி படப்பிடிப்பு குழுவினருக்கு சிற்றுண்டி அளிக்கவும் அந்த ரசிகருக்கு விவேக் காண்ட்ராக்ட் வாங்கி தந்திருக்கிறார்.

நடிகர் விவேக் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் அவரது இந்த மனிதநேயமிக்க செயல் இப்போது வெளிச்சத்துக்கு வந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் ஒரு சிறந்த மனிதராக நல்ல பண்பாளராக நடிகர் விவேக் வாழ்ந்து மறைந்திருப்பதையே இந்த தரமான சம்பவம் ரசிகர்களுக்கு உணர்த்துகிறது.

- Advertisement -

சற்று முன்