- Advertisement -
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, எனக்கு தெரிந்து இங்கு அரசியல் புரிதலோடு இருக்கும் நடிகர்கள் என்றால் அது அன்பிற்குரிய நண்பர் அரவிந்த் சாமி என் தம்பி விஜய் சேதுபதி என் அருமை மைத்துனர் பிரகாஷ் ராஜ். இவர்கள் தான் ஓரளவு அரசியல் புரிதலோடு பேசுபவர்கள். இதில் அரவிந்தசாமி கூறுகையில் நடிப்பு என்பது வேறு அரசியல் நிர்வாகம் வேறு என்று தெளிவாக கூறியிருக்கிறார் என்று சீமான் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.





