- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 69 மட்டுமல்ல, தளபதி 70 கண்டிப்பா இருக்குது - அதுவும் 3 மாஸ் ஹிட்...

தளபதி 69 மட்டுமல்ல, தளபதி 70 கண்டிப்பா இருக்குது – அதுவும் 3 மாஸ் ஹிட் படங்களை தந்த டைரக்டர் இயக்கும் படமாம், போட்றா வெடிய… உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய், ரஜினிகாந்த் இல்லை என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு, பஞ்சாயத்து செய்யும் நிலைக்கு ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா வந்தது. அந்தளவுக்கு வசூலில் ரஜினியை காட்டிலும், டாப் ஸ்டார் ஆக உயர்ந்த நிற்பவர் நடிகர் விஜய். ஆனால் தொடர்ந்து அவர் இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேல் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி தமிழக அரசியலில் குதித்து விட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியுள்ள அவர் 2026 ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு ஜெயித்து தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்வதுதான் தனது லட்சியம் என்று ஏற்கனவே சூளுரைத்து விட்டார். நாளை தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் 1.5 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

நாளைய மாநாட்டில் தனது கட்சியின் முக்கிய கொள்கைகள் கோட்பாடுகள் எதிர்கால திட்டங்கள் குறித்து நடிகர் விஜய் விரிவாக பேச இருக்கிறார் . இந்த விழாவில் நடிகை ஷாலினி அஜீத்குமார், விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் விழா மேடையில் உள்ள ஸ்கிரீனில் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கும் வீடியோக்களை ஒளிபரப்பவும் கட்சியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தை தொடர்ந்து, தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை எச். வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், மாநாட்டுக்கு பிறகு அடுத்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் தளபதி 69 படப்பிடிப்பில் விஜய் பங்கேற்க உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் .

- Advertisement -

இந்த முறை சூட்டிங் 20 நாள், கட்சிப்பணி 10 நாள் என நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய் அரசியல்வாதியானது மக்களை சந்தோஷப்படுத்தினாலும், ரசிகர்களை பொறுத்தவரை அவர் சினிமாவில் இனி நடிப்பதில்லை என்று அறிவித்திருப்பது பெரிய ஏமாற்றத்தை, வருத்தத்தை தந்துள்ளது. அவர் அரசியலில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

நடிகர் விஜய் தனது 69வது படத்தில் முடித்துவிட்டு, மீண்டும் ஒரு படத்தில் 70வது படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியில் ஜவான் படத்தை இயக்கியவர் அட்லி. இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிகில், தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களை இயக்கி மாஸ் ஹிட் படங்களாக கொடுத்தவர். அதனால் இந்தியில் அட்லி இயக்கும் ஒரு படத்தில், நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

- Advertisement -

சற்று முன்