- Advertisement -
Homeபொழுதுபோக்குஇண்டர்கேலக்டிக் சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் மீண்டும் உருவாகும் தமிழ் படம் - இன்று முதல்...

இண்டர்கேலக்டிக் சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் மீண்டும் உருவாகும் தமிழ் படம் – இன்று முதல் தமிழ் படம் 3 படப்பிடிப்பு துவக்கம்!

- Advertisement -

இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் நடிகர் மிர்சி சிவா நாயகனாக நடித்து 2010ல் வெளியான படம் தமிழ் படம். அதுவரை தமிழில் வந்த படங்களை கலாய்த்து உருவான இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டில் தமிழ் படம் 2 வெளியானது. இந்த படமும் வரவேற்பை பெற்ற நிலையில் தமிழ் படம் 3 எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருந்தனர். இந்த நிலையில் தமிழ் படம் 3 இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்று இயக்குனர் சிஎஸ் அமுதன் போஸ்டர் உடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் சிவா கதாநாயகனாக நடிக்கிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. முதல் பாகத்தில் மிர்சி சிவாவாக இருந்து இரண்டாம் பாகத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் நடித்த சிவா இப்போது இந்த தமிழ் படம் 3ல் இண்டர்கேலக்டிக் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இந்த போஸ்டரில் நடிகர் சிவாவை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்