- Advertisement -
நூறு கோடி வானவில் படம் குறித்து இயக்குனர் சசி கூறியதாவது, ஒரு காதல் படத்துக்கு நன்கு அறிமுகமான நடிகை வேண்டும் அல்லது முற்றிலும் புது முகமாக இருக்க வேண்டும். அப்படி புது முகமாக சித்தி இத்னானி வந்தார். தமிழில் உணர்ந்து பேசினால் நன்றாக இருக்கும். பயிற்சி வகுப்புகளில் இருக்க வேண்டும் என்றதற்கெல்லாம் அவர் சம்மதித்தார். இதன் படப்பிடிப்பை முடித்த போது இயக்குனர் கௌதம் மேனன், வெந்து தணிந்தது காடு படத்துக்காக இந்த பெண்ணை தேடி வந்தார். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் இந்த படம் தாமதமாகி விட்டது. அவரது படம் முதலில் வெளியாகி விட்டது என்று இயக்குனர் சசி கூறியிருக்கிறார்.





