- Advertisement -
Homeபொழுதுபோக்குநாடு காணாத கேவலத்தை செய்த ஒரே கட்சி தவெக தான், தரம் தாழ்ந்த அரசியல் சித்து...

நாடு காணாத கேவலத்தை செய்த ஒரே கட்சி தவெக தான், தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை பொய்க்கால் குதிரை அரசு நிறுத்த வேண்டும் – முன்னாள் முதல்வர் கடும் தாக்கு!

- Advertisement -

முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குதிரை பேரம் நடத்தி எங்கள் கூட்டணியில் இருந்த எம்எல்ஏவை கடத்தி கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தில்லுமுல்லு செய்தது தவெக. கீழ் மாடியில் ராஜினாமா மேல்மாடியில் இணைப்பு விழா என்று நாடு காணாத கேவலத்தை அரங்கேற்றிய ஒரே கட்சி தவெக. உடனடியாக மன்னனை விடுதலை செய்ய வேண்டும். தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை பொய்க்கால் குதிரை தவெக அரசு நிறுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்