- Advertisement -
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, என்னை பற்றி பலவிதமாக பேசுகிறார்கள். இவரை அவர்கள் இயக்குகிறார்கள். இவர் பின்னாடி அவர்கள் இருக்கிறார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். என் பக்கம் யாரும் இல்லை. என்னை இயக்குவது இறைவன். என் பின்னால் இருப்பது ரசிகர்கள். என் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். எண்ணம் போல் வாழ்க்கை என்று நடிகர் தனுஷ் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





