- Advertisement -
முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது, திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளதாகவும் பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இந்த வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் விஜய் மாமாவின் அரசு கண்டுபிடிக்கவில்லை. கேக் கொடுக்கும் அட்டையில் ஆல் ஈஸ் வெல் என்ற எழுதி இருக்கிறார்களாம். உங்கள் ஆட்சியில் எங்கே ஈஸ் ஆல் வெல் சிஎம்? என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.





