- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறியதாவது, சினிமா துறையில் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்று யாருமே கிடையாது. நானும் முயற்சி செஞே்சன். யாரும் பிரண்ட் ஆக மாட்டேங்கறாங்க. தமிழில் நடிச்சிருக்கேன். தெலுங்கு கன்னடம் மொழிகளில் நடிச்சிருக்கேன். ஜெகபதி பாபுன்னு ஒரு நடிகர் இருக்கிறார். அவர் மட்டும்தான் என்னோட பிரண்ட். குளோஸ் பிரண்ட். ஏதாவது பிரச்னைன்னு சொன்னா உடனே ரெஸ்பான்ஸ் பண்ணுவான். அவன்தான் பிரண்ட் என்று அர்ஜூன் கூறியிருக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு தமிழில் லிங்கா பைரவா கத்திசண்ட விஸ்வாசம் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.





