- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது பழிவாங்கும் நடவடிக்கை - நடிகர் கமல் மீது குற்றம் சாட்டிய கிருஷ்ணசாமி - மீண்டும்...

இது பழிவாங்கும் நடவடிக்கை – நடிகர் கமல் மீது குற்றம் சாட்டிய கிருஷ்ணசாமி – மீண்டும் பஞ்சாயத்து இனிதே ஆரம்பம்!

- Advertisement -

சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் 237 படத்துக்கு சண்டியர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது, 23 ஆண்டுகளுக்குப் பிறகு சண்டியர் என்று பெயரை கமலஹாசன் மீண்டும் அறிவித்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கையாகும். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கமல் சாதி மதம் சார்ந்த தனது உறுதிமொழிக்கு எதிராக செயல்படுகிறார். கமல் அறிவித்த சண்டியர் திரைப்படம் நிச்சயம் தொடங்கப்படக் கூடாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இவரது எதிர்ப்பால் தான் கமல், தனது படத்துக்கு சண்டியர் என்பதற்கு பதிலாக விருமாண்டி என பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்