- Advertisement -
ஆந்திர மாநில துணைமுதல்வர் நடிகர் பவன் கல்யாண், அவரது 3வது மனைவி அன்னா கோனிடலா இருவரும் பரஸ்பரம் தங்களது மனமுறிவு பிரிவை அறிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், எங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியை ஒன்றாக கழித்த பிறகு பரஸ்பர புரிதலுடனும் மரியாதையுடனும் பிரிந்து செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும் நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவும் எங்கள் அருமையான பிள்ளைகளுக்கு அன்பான பெற்றோராகவும் இருப்போம். எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சியும் நலனுமே எப்போதும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.





