- Advertisement -
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. முன்னணி நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்தும் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றார். ஆனால் கடந்த 2022ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக தமிழில் ஒரு ஹிட் படம் கூட அவர் கொடுக்கவில்லை. கடைசியாக அவர் தமிழில் நடித்த ஓ 2 கனெக்ட் இறைவன் அன்னபூரணி டெஸ்ட் ஹாய் மூக்குத்தி அம்மன் 2 என அவரது படங்கள் அனைத்தும் பிளாப் ஆகி விட்டது. சுந்தர் சி இயக்கத்தில் பெரியதாக எதிர்பார்த்த மூக்குத்தி அம்மன் 2 படமும் சொதப்பி விட்டது.





