- Advertisement -
நடிகர் கமல் தனது 237 படத்துக்கு சண்டியர் என டைட்டில் வைத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது, கமல்ஹாசன் நடிக்கும் சண்டியர் திரைப்படத்தின் தலைப்பை ஒரு வாரத்திற்குள் மாற்ற வேண்டும். அப்படி மாற்றாவிட்டால் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். வன்முறையை தூண்டும் வகையிலான இந்த படத்தின் தலைப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து போலீஸ் டிஜிபி மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி புகார் மனுக்களை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





