வேலைக்கு செல்லும் பெண்கள் பெண் போலீஸ் அதிகாரிகள் சமீபத்தில் ஐஏஎஸ் படித்த கலெக்டர் உட்பட பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. இதில் சினிமா டிவி துறைகளில் இருப்பவர்களுக்கு இன்னும் தொல்லைகள் அதிகம். டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை பிரதியா. இவர் மகாநதி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதால் மகாநதி பிரதியா என அழைக்கப்படுகிறார். இவர் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். மகாநதி பிரதியாவிடம் ஒருவர் பேசியிருக்கிறார். நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் உங்கள் வீட்டு வாசலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்கும் என்று கூறியிருக்கிறார். பரவாயில்லை எனக்கு ஆட்டோவில் பயணிப்பதே சந்தோசம் தான் என்று கூறி பிரதியா அந்த அட்ஜஸ்ட்மென்ட்க்கு மறுப்பு தெரிவித்ததாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.





