- Advertisement -
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் வில்லனாக மிரட்டியவர் நடிகர் கிஷோர். தொடர்ந்து வம்சம் வெண்ணிலா கபடிக்குழு ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நேர்காணல் ஒன்றில் நடிகர் கிஷோர் கூறியதாவது, எனக்கு மாடுகளோட வாழணும். மாடுகள் எனக்கு பக்கத்திலேயே இருக்கணும். அதுங்க கூட தூங்கணும்ன்னு ஆசை. சாணம் வாசம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலதான் மாட்டு கொட்டாய் வீட்டுக்குள்ள கட்டிட்டேன். நாங்க எல்லோரும் குடும்பத்தோட ஒண்ணாதான் படுப்போம். எனக்கு இயற்கையாக வாழ ரொம்ப பிடிக்கும் என்று நடிகர் கிஷோர் கூறியிருக்கிறார்.





