- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மோகன்ராம் கூறியதாவது, என்கிட்ட அஜீத் டிரைவராக இருந்தார். அஜீத்துக்கு ஆரம்பத்துல பெரிய போராட்டம். படம் பண்ணியாகணும் என்று புலம்புவார். என்ன சார் இப்படி இருக்கே சார்? என்பார். ஒண்ணு பண்ணு. என்கிட்ட புலம்பாதே என்பேன். நான் ஒரு இடத்துக்கு உன்னை கூட்டீட்டு போறேன். அங்க போய் புலம்பு அப்படீன்னு ஈசிஆர்ல தான் ஷூட்டிங். வர்ற வழியில் ஷீரடி சாய்பாபா கோவில் இருக்கும் அங்க. நேரா காரை அங்க விட்டு அஜீத்தை இறங்க சொன்னேன். அங்க பாரு தாத்தா இருக்கிறார். போய் முன்னாடி உட்கார். என்ன சொல்லணுமோ சொல்லு என்றேன். 30 நிமிடம் 45 நிமிடம் அங்க உட்கார்ந்துட்டு அப்புறம் போலாம்ன்னு வந்துட்டார் என்று அந்த நேர்காணலில் நடிகர் மோகன்ராம் கூறியிருக்கிறார்.





