- Advertisement -
Homeபொழுதுபோக்குமாணவர்கள் நலனில் அக்கறை உள்ளவர் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்கலாமா? பதில் சொல்வாரா நடிகர் சூர்யா?

மாணவர்கள் நலனில் அக்கறை உள்ளவர் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்கலாமா? பதில் சொல்வாரா நடிகர் சூர்யா?

- Advertisement -

இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த சீன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளரும் சூர்யா தான். இதற்கிடையே மிக விரைவில் அவர் மீடியாவை சந்தித்து விருந்து அளித்து நன்றி தெரிவிக்க உள்ளார். இந்த நிலையில் சீன் படத்தில் சூர்யா சிகரெட் புகைத்து நடித்த காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கல்வியில் அக்கறை மாணவர்கள் நலனில் தனிக் கவனம் செலுத்தும் நடிகர் சூர்யா இப்படி புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்கலாமா? கதைக்கு தேவை என்று இயக்குனர் சொன்னாலும் தயாரிப்பாளர் என்ற முறையில் சூர்யா அதை மறுத்திருக்கலாமே, மாணவர்களின் வளர்ச்சி குறித்து அக்கறையாக பேசுபவர் அந்த தவறான காட்சியை தவிர்த்து இருக்கலாமே என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு நன்றி விழாவில் சிகரெட் காட்சியில் நடித்தது குறித்து நடிகர் சூர்யா விளக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சற்று முன்