- Advertisement -
சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைந்தார். அவர் தனது மரணம் குறித்து எப்போதும் பேசி வந்தார். அவர் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. அது தன் அருகில் தனது தோள்மீது கை போட்டிருக்கும் நண்பனைப் போல் இருக்கிறது என்பார். நான் இறந்த பிறகு என்னை எரிப்பதற்காக 12 காய்ந்த விறகுகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவை மட்டுமே என்னுடையவை. ஈரமான விறகுகளைப் பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு கண் எரிச்சலில் மற்றவர்கள் அழுவது ஏதோ என்னை நினைத்து அழுவதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். மரணித்த பிறகு அத்தகைய தவறான கருத்துகள் உருவாக நான் அனுமதிக்க மாட்டேன். அதுவே என் இறுதி ஆசையும் என்று தன் மரணத்திற்கும் மேடை நாடகத்தின் தொனியில் முடிவுரை எழுதிவிட்டு மறைந்திருக்கிறார் நானா பாடேகர்.





