- Advertisement -
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் ஜெனிலியா. தனது தனித்துவமான பேஷன் ஸ்டைல் தேர்வுகளால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஜெனிலியா, தற்போது 5 பைசா நாணய வடிவிலான தோடு அணிந்து இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளார். இந்தியாவில் புழக்கத்தில் இல்லாத 5 பைசா நாணயத்தின் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காதணியின் விலை சுமார் 2 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஜெனிலியா அணிந்த 5 பைசா வடிவ காதணி இப்போது டிரண்டிங்கில் உள்ளது.





