- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்லீ என்னை ஏமாத்திட்டார்.. ரொம்பவே கோபத்தில் இருக்கிறேன்.. ப்ரியாமணி என்ன இப்படி சொல்லிட்டாங்க?

அட்லீ என்னை ஏமாத்திட்டார்.. ரொம்பவே கோபத்தில் இருக்கிறேன்.. ப்ரியாமணி என்ன இப்படி சொல்லிட்டாங்க?

- Advertisement -

தமிழில் முன்னணி இயக்குநரான அட்லீ ஹிந்தியில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். முதல் படமே ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த ஏழாம் தேதி படமானது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடுமையான ட்ரோல்களை சந்தித்துவரும் ஜவான் வட மாநிலங்களில் டீசண்ட்டான விமர்சனத்தையே பெற்றுவருகின்றனர்.

வசூலிலும் படம் சக்கைப்போடு போட்டுவருகிறது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. எனவே விரைவில் பதான் படம் போல் 1000 கோடி ரூபாயை படம் வசூலித்துவிடும் என்று உறுதியாகியிருக்கிறது. இதன் காரணமாக அட்லீக்கும் பாலிவுட்டில் மார்க்கெட் ஏறியிருக்கிறது. அவர் அடுத்ததும் ஹிந்தி படம் ஒன்றைத்தான் செய்யப்போகிறார் என தகவல்கள் இப்போது வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் ஜவான் படத்தில் ஷாருக்கான் கேங்கில் இருக்கும் ஒரு கைதியாக நடித்திருக்கும் ப்ரியாமணி படம் குறித்தும், அட்லீ குறித்தும் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய ப்ரியாமணி, “ஷாருக்கான் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து கேமியோ ரோலாக இருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் அவருடன் படம் முழுக்க நடிக்க வாய்ப்பு என்று தெரிந்ததும் சந்தோஷமடைந்தேன்.

அட்லீ இயக்குகிறார் என்றதும் ஓகே சொல்லிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். ஜூம் காலில்தான் அட்லீ என்னிடம் கதை சொன்னார். அப்போது ஆர்யாவும் வந்தார். அட்லீ எனது நண்பர்தான் என அறிமுகம் செய்துவிட்டு அவர் சென்றுவிட்டார். பிறகு அட்லீ கதை எனக்கு பிடித்திருந்தது. உடனே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

- Advertisement -

ஜவான் படத்தில் நான் நடிக்கிறேன் என்று செய்தி வெளியானதும் இதிலும் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகிறேன் என ட்ரோல் செய்தார்கள். ஆனால் நான் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட நல்ல கதாபாத்திரட்தை எந்த அளவு சிறப்பாக செய்யமுடியுமோ அந்த அளவு செய்துள்ளேன் என்று நம்புகீறேன்.

ஷாருக்குடன் கேமியோ ரோலில் விஜய் நடிக்கவிருப்பதாக செய்தி ஒன்று கிளம்பியது. அது எங்களுக்கே ஆச்சரியத்தை கொடுத்தது. உடனே நான் அட்லீயிடம் விஜய் சார் நடிக்கிறாரா என்றேன். அவரோ சிரித்துக்கொண்டே நடிக்க வைக்கலாமே என கூலாக பதில் கொடுத்தார்.அதனையடுத்து நான் அப்படி அவர் நடித்தால் எனக்கு அவருடன் சீன் வைத்துவிடுங்கள் என்றேன். அதற்கும் அவர் வைத்திடலாமே என்றார். ஆனால் கடைசிவரை விஜய் நடிக்கவில்லை. அட்லீ என்னை ஏமாத்திட்டார். அவர் மீது கோபத்தில் இருக்கிறேன்” என்றார்.

- Advertisement -

சற்று முன்