- Advertisement -
மலையாள சினிமாவில் மெகா சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி. சமீபத்தில் நடந்த 72வது தேசிய திரைப்பட விழாவில் பிரமயுகம் படத்தில் நடித்ததற்காக 4வது முறையாக தேசிய விருது பெற்ற மகா கலைஞர். ரஜினி கமல் போல பெரிய மூத்த நடிகர். ஆனால் நடிகர் தனுஷ் நடித்த ஓம் படம் போஸ்டர்களில் விளம்பரங்களில் நடிகர் மம்முட்டி பெயர் இடம்பெறவில்லை. நடிகர் விஜய் நடித்த ஜில்லா படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்த போது விஜய் மோகன்லால் இணைந்து நடிக்கும் படம் ஜில்லா என்றுதான் போஸ்டர்களில் இடம்பெற்றது. ஆனால் தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தில் மூத்த கலைஞர் மம்முட்டி பெயரை அலட்சியப்படுத்துவது சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்துள்ளது.





