- Advertisement -
Homeபொழுதுபோக்குமற்றவர் அரியணையில் பங்கு கேட்க மாட்டேன், அனிருத் வாய்ப்பை லிடியன் நாதஸ்வரம் பெற்றாரா? - சர்ச்சைக்கு...

மற்றவர் அரியணையில் பங்கு கேட்க மாட்டேன், அனிருத் வாய்ப்பை லிடியன் நாதஸ்வரம் பெற்றாரா? – சர்ச்சைக்கு அவரே தந்த விளக்கம்!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தில் அனிருத்துக்கு பதிலாக லிடியன் நாதஸ்வரம் இசையமைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்து லிடியன் நாதஸ்வரம் தனது பதிவில் கூறியிருப்பதாவது, மற்றொருவருக்கு சொந்தமான அரியணையில் பங்கு கேட்க நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அனிருத் அண்ணா மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எங்களுடைய திருக்குறள் புராஜெக்ட்டில் அவர் பங்கேற்றதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்திய திரை உலகில் குறிப்பாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்கான நேரம் வரும்வரை காத்திருப்பதில் மகிழ்ச்சியே. எங்கள் வீட்டிற்கு நேரில் வந்து ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் சாருக்கு எனது நன்றிகள் என்று லிடியன் நாதஸ்வரம் கூறியிருக்கிறார்.

சற்று முன்