- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோவோட அடுத்த அப்டேட் எப்போதான் வரும்... முதல் முறையாக வாய் திறந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...

லியோவோட அடுத்த அப்டேட் எப்போதான் வரும்… முதல் முறையாக வாய் திறந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில், லியோவும் ஒன்று. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விட வசூல் மழை பொழிந்திருக்க, அடுத்ததாக அனைவரது பார்வையும், லியோ மீது விழுந்து உள்ளது. இந்த திரைப்படத்தில் இத்தனை எதிர்பார்ப்புகள் இருக்க, மிக முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டருக்கு பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கிறார். சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் அவர்களுக்கு எந்தவிதமான காட்சிகளை லோகேஷ் ஒதுக்கி இருப்பார் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டின் துவக்கத்தில் லியோவுக்கான அறிவிப்பு வெளியாகி, படப்பிடிப்பும் மிக வேகமாக நடைபெற்றது. காஷ்மீர், சென்னை, தலக்கோணம் பகுதிகளில் சூட்டிங் நிறைவு பெற்ற நிலையில், கடைசியாக போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

லியோவில் இருந்து ஏற்கனவே சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்பட்டன. ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிப்பதாகவும், ஹரால்டு தாஸ் என்னும் ரோலில் அர்ஜுன் வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இது போக நா ரெடி தான் பாடலும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

- Advertisement -

ஆனால் அந்தப் பாடலில் மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்க பழக்கத்தின் ஆதரவான வரிகள் நிறைய இருப்பதாக கூறி, சில வரிகளை மத்திய அரசு நீக்கியது. இது பற்றி பின்னர் கருத்து தெரிவிப்பதாக தயாரிப்பாளர் லலித் குமார் கூறியிருந்தார். மேலும் வரும் வாரங்களில் லியோ படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகும் என்றும் அறிவித்தார்.

ஆனால் தயாரிப்பாளர் கூறியது போல் எந்த ஒரு அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் கடுப்பாகினர். இது குறித்து சைமா விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேள்வி எழுப்ப, இன்று முதல் அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்தார். படம் ரிலீஸ் ஆவதற்கு 30 நாட்களுக்கு முன்னாடி இருந்து ப்ரொமோஷனை ஆரம்பிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்