- Advertisement -
Homeபொழுதுபோக்குஜப்பான் திரைப்படம் ஓடாமல் போனதற்கு இதுதான் காரணம்... பிரபல எழுத்தாளர் வெளிப்படையாக இப்படி பேசிட்டாரே...

ஜப்பான் திரைப்படம் ஓடாமல் போனதற்கு இதுதான் காரணம்… பிரபல எழுத்தாளர் வெளிப்படையாக இப்படி பேசிட்டாரே…

- Advertisement -

நடிகர் கார்த்திக்கு 25வது திரைப்படமாக எடுக்கப்பட்டது ஜப்பான் திரைப்படம். கொள்ளைச் சம்பவத்தையும் அதன் பின்னணியும் வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. கார்த்தியின் 25வது திரைப்படம் என்பதால் இதனை பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் திரைப்படம் எடுபடாமல் போனது.

இந்த திரைப்படத்தை ராஜூமுருகன் இயக்கி இருந்தார். பத்திரிக்கையாளராக இருந்த அவர் குக்கூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆக்கினார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நடுவே ஏற்படும் காதலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

- Advertisement -

படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடிக்க, குக்கூ திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவான தோழா திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார் ராஜூ முருகன். இதனைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் ஜோக்கர் திரைப்படம் வெளியானது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை கொண்டு எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அது மட்டுமல்லாமல் தமிழுக்கான சிறந்த தேசிய திரைப்படமாகவும் ஜோக்கர் அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிப்ஸி எனும் படத்தை ராஜு முருகன் இயக்கினார்.

- Advertisement -

ஜீவா கதாநாயகனாக நடித்த இந்தத் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இப்படியான சூழலில் தான் கார்த்தியுடன் அவர் இணைந்த ஜப்பான் திரைப்படமும் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த நிலையில் படத்தின் தோல்வி குறித்து எழுத்தாளர் பவா செல்லதுரை பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

ஜப்பான் திரைப்படம் நல்ல ஹியூமர் உள்ள திரைப்படம். ராஜூ முருகன் இதற்காக பயங்கரமாக உழைத்து இருந்தார். ஒருவேளை பெரிய ஹீரோ இல்லாமல் சாதாரணமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தால் நன்றாக ஓடியிருக்கும். ஆனால் ஹீரோயின் தலையீடு தயாரிப்பாளரின் தலையீடு இருந்ததால் படம் நினைத்தபடி வரவில்லை. அவர்களை திருப்தி படுத்துவதற்காக சில காட்சிகள் திணிக்கப்பட்டதே காரணமாக பார்க்கப்படுகிறது என்று கூறி இருக்கிறார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்