- Advertisement -
மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணர் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஒரு காலத்தில் ஆணழகன் ஜீன்ஸ் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். ஆனால் குடும்ப பிரச்சனை நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில் பேசும் அளவுக்கு அவருக்கு அவ்வளவு விரக்தி இருந்தது. இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அவர் மனது வைத்தால் மீண்டும் ஹீரோவாக ஜெயிக்கலாம். அழகும் இருக்கு. பணமும் இருக்கு. மீண்டும் சினிமாவில் அவரால் சாதிக்க முடியும். அஜீத்குமார் விஜய்இடத்தில் இருக்க வேண்டியவர் நடிகர் பிரசாந்த் தான் என்று அந்தணன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





