- Advertisement -
அமானுஷ்யம் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகும் தாயன் என்ற திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். இயக்குனர் பா சதாம் இயக்கும் இந்த படத்தில் ராதிகா வைர வேலவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஷ்யா சீனா ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிகட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இளையராஜா இசையில் அமானுஷ்யம் நிறைந்த திரில்லர் படம் உருவாவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.





