- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லா ஊர்களிலும் ரோட்டில் ஓடப் போகுது டிரெயின், தயாரிப்பாளர் எடுத்த வித்யாசமான முயற்சி -...

எல்லா ஊர்களிலும் ரோட்டில் ஓடப் போகுது டிரெயின், தயாரிப்பாளர் எடுத்த வித்யாசமான முயற்சி – இப்படியும் ஒரு பிரமோசனா என ரசிகர்கள் ஆச்சரியம்!

- Advertisement -

வரும் டிசம்பர் 4ம் தேதி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசனுக்காக ரயில் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட பிரத்தியேக பேருந்து டிரெயின் ஆஃப் வீல்ஸ் என்ற ப்ரமோஷன் டூர் சென்னையில் தொடங்கியது. இந்த பயணத்தை இயக்குனர் மிஷ்கின் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். தொடர்ந்து புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்ல உள்ள இந்த டூர் பஸ் முழுக்க முழுக்க பிரம்மாண்டமான ரயில் செட்டில் படமாக்கப்பட்ட டிரெயின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்