- Advertisement -
தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான நடிகை என்ற புகழுக்கு சொந்தக்காரர் நடிகை தேவயானி. ஆனால் அவர் அறிமுகமான முதல் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். இதுகுறித்து நடிகை தேவயானி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, என்னுடைய முதல் படம் தொட்டாச்சிணுங்கி. அந்த படத்துல நான் மாடர்ன் டிரஸ் போட்டுட்டு நடித்தேன். அந்த ட்ரெஸ் நல்லா இருந்தாலும் என்னவோ தெரியலே. அந்த மாதிரி டிரஸ் எனக்கு பிடிக்கவே இல்லை. வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போக நமக்கு ஒண்ணு வேணும். அப்படித்தான் எனக்கு அந்த படம். ஏன்னா சினிமாவில் அறிமுகம் ஆகிறதே பெரிய விஷயம். இந்த வாய்ப்பு கொடுத்த அதியமான் சாருக்கு ரொம்ப நன்றி என்று நடிகை தேவயானி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





