- Advertisement -
Homeபொழுதுபோக்குஏற்கனவே அப்படி என்னிடம் நடந்திருக்கார்.. அவரை அடிச்சிருக்கணும்.. கூல் சுரேஷை வெளுத்துவிட்ட தொகுப்பாளினி

ஏற்கனவே அப்படி என்னிடம் நடந்திருக்கார்.. அவரை அடிச்சிருக்கணும்.. கூல் சுரேஷை வெளுத்துவிட்ட தொகுப்பாளினி

- Advertisement -

சிம்புவின் திவிர ரசிகராக அறியப்பட்ட கூல் சுரேஷ் மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களுக்கு வித்தியாசமான முறையில் ப்ரோமோஷன் செய்தார். அது சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அதனையடுத்து வெளியான மற்ற படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கு வரும் அவர் ஏதேதோ பேசி மீடியாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி மோகன் ஜி இயக்கிய பகாசூரன் படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் இன்னும் வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். நிலைமை இப்படி இருக்க தொடர்ந்து படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு விருந்தினராக வருகிறார். அப்படி வரும் அவர் நகைச்சுவையாகவும் பேசுகிறார்.அது படத்துக்கு கூடுதல் ப்ரோமோஷனாகிவிடுகிறது.

அந்தவகையில் மன்சூர் அலிகான் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் சரக்கு படத்தின் இசை வெளியீட்டுக்கும் வந்திருந்தார். வந்தவர் சும்மா இருக்காமல் தன் அருகே இருக்கும் தொகுப்பாளினிக்கு மாலையை போட்டுவிட்டார். அது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.மேலும் மன்சூர் அலிகான் இந்த விவாகரத்துக்கு மன்னிப்பு கேட்டார்.

இந்த சூழலில் நேற்று மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்த கூல் சுரேஷ், “நான் எப்போதும் விளையாட்டாக செய்வேன். இந்த முறை விபரீதமாகிவிட்டது. சினிமாவில் நடித்து பெரிதாக வர முடியவில்லை. எனவே மாநாடு, வெந்து தணிந்தது காடு என பேசி எனது ரூட்டை மாற்றி பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன். அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறே” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சரக்கு படத்தின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “கூல் சுரேஷ் அப்படி நடந்துகொண்டதை நினைத்தால் இன்னமும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதிலும் என் தோள்படையை பலவந்தமாக அழுத்தி யாரும் எதிர்பார்க்காத நொடியில் அப்படி நடந்துகொண்டார். ஒருவர் பொது மேடையில் இப்படி தீடிரென நடந்துகொண்டால் என்ன செய்ய முடியும். கன்னத்தில் பளார்னு ஒன்னு வைக்காமல் விட்டுட்டோமேனு இப்போ தோன்றுகிறது.

கிறுக்குத்தனம் செய்வதில்கூட சில எல்லைகள் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் யாரையும் அது பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சியில் என்னிடம் இப்படி வம்பு செய்திருக்கிறார். அவரோட நடவடிக்கைகள் பொதுவாகவே எனக்கு பிடிக்காது அதுதான் உண்மை. அதனால்தான் இவரை மேடைக்கு அழைக்கும்போது எதையும் சொல்லாமல் கூல் சுரேஷ் என்று மட்டுமே கூப்பிடுவேன்.

ஆனால் அப்படி கூப்பிடாதே. யூட்யூப் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் இருக்கிறது. அதை சொல்லித்தான் கூப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் இந்தமுறை வேண்டுமென்றே மாலையை என் கழுத்தில் போட்டிருக்கிறார்.மறுமுறை இப்படி செய்தால் ஒரு அறையாவது கொடுத்திடுவேன். இல்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திடுவேன்” என்றார்.

சற்று முன்