- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருக்கு என்னை யாருன்னே தெரியலே, ரொம்ப அப்செட் ஆயிட்டேன் - விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து...

அவருக்கு என்னை யாருன்னே தெரியலே, ரொம்ப அப்செட் ஆயிட்டேன் – விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் சியான் விக்ரம் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்பில் சிறந்து விளங்குபவர் சியான் விக்ரம் தான் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். எந்த கேரக்டர் என்றாலும் அதில் முழுமையான சிறப்பான அழுத்தமான நடிப்பை தரும் கெட்டிக்கார கலைஞராக விக்ரம் இருந்து வருகிறார்.

சமீபகாலமாக அவரது படங்கள் சில சரியாக போகவில்லை என்றாலும் நடிப்பை பொருத்த வரை அவரது பெயர் சொன்ன படங்கள் பல உள்ளன. குறிப்பாக சேது சாமி அருள் பொன்னியின் செல்வன் இராவணன் அந்நியன் ஐ என பல படங்களை சொல்ல முடியும். கடைசியாக வீரதீர சூரன் 2 படத்தில் விக்ரம் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சீயான் விக்ரம் கூறியதாவது, ஒருமுறை நான் விமானத்தில் இருந்தபோது பக்கத்துல சீட்டுல டக்குன்னு சச்சின் வந்து உட்கார்ந்தார். நான் உடனே சந்தோஷத்தில் ஓ மை காட் அப்படீன்னு கத்திட்டேன்.

அவர் உடனே என்ன ஆச்சு அப்படீன்னு கேட்டுட்டு ரொம்ப கேஷூவலா கேம்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டார். உண்மையில் அவருக்கு நான் யாருன்னு தெரியலே. தோனிக்கு என்னை தெரியும். அமிதாப் சாருக்கு என்னை தெரியும். பிரமதர் மோடி சாருக்கு கூட என்னை தெரிய வாய்ப்பிருக்கு. ஆனா இவருக்கு என்னை தெரியலே.

- Advertisement -

எனக்கு கை கால் எல்லாம் படபடன்னு வருது. ஐயோ எப்படி அவர்கிட்ட பேசறதுன்னு ஒரே பரபரப்பா இருக்குது. அப்புறம் நானே, சார் நான்தான் விக்ரம். தமிழ் ஆக்டர் அப்படின்னு சொன்னேன். அவர் அப்படியா? என்ன படம் நடிச்சீங்கன்னு கேட்டார். நான் சொன்னேன்.

அதற்கு அவர், நான் அதிகம் படம் பார்க்கிறது இல்லை. நான் பார்த்த கடைசி படம் அமிதாப்பச்சன் படம் ஒண்ணு. பழைய படம்ன்னு சொன்னார். அவர்கூட எனக்கு செல்ஃபி எடுக்க ரொம்ப ஆசையா இருந்தது. ஆனால் அதை பண்ணினா அநாகரீகமாயிடுமோ அப்படீன்னு நான் செல்ஃபி எடுக்கலே என்று நடிகர் விக்ரம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்