- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள், முதன் முதலில் 100 கோடி ரூபாய் வசூலை தொட்டது எந்த...

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள், முதன் முதலில் 100 கோடி ரூபாய் வசூலை தொட்டது எந்த படங்களில் தெரியுமா… முழு நீள பட்டியல் இதோ…

- Advertisement -

கோலிவுட் மட்டுமல்ல டோலிவுட் பாலிவுட் வரை ஒரு திரைப்படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானிக்கிறது. படத்தில் நல்ல கதை அம்சம் இருந்து, விமர்சன ரீதியாக வரவேற்கப்பட்டாலும் அந்தத் திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபகரமாக அமைந்ததா என்பதையே கடைசி பார்க்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, குப்பை ரகத்தில் படம் இருந்தாலும், பிற படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு இருந்தாலும் அந்தப் படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெரும்பட்சத்தில், தயாரிப்பாளர்கள் அதனை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இந்தப் பட்டியலில் தான் இயக்குனர் அட்லி, கோலோச்சி இருக்கிறார்.

- Advertisement -

அரைப்பது என்னமோ அதர பழசான கதையாக இருந்தாலும், பிற படத்தின் காட்சியை அப்படியே சுட்டு தன் படத்தில் வைத்தாலும் அதை மக்கள் ரசிக்கும் படி பண்ணுவதால் இப்போது வரை அவர் வெற்றி இயக்குனராகவே வலம் வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இப்போது இருக்கும் முக்கிய நட்சத்திரங்கள் எப்போது தங்கள் திரைப்படத்தின் மூலம் 100 கோடி ரூபாய் வசூலை பெற்றார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் முதலில் நாம் பார்க்கப்போவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி என பாக்ஸ் ஆபீஸ் ஹிட்களை கொடுத்த அவர், சிவாஜி திரைப்படத்தின் மூலம் தான் 100 கோடி ரூபாய் அள்ளிய நாயகர் என்ற அந்தஸ்தை பெற்றார். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு தசாவதாரம் திரைப்படம் இந்த புகழை கொடுத்தது.

- Advertisement -

தளபதி விஜயின் திரை உலக கேரியரிலேயே மிக முக்கிய இடத்தைக் கொடுத்த திரைப்படம் துப்பாக்கி. முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் தான், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளி விஜய்யை சக்கரவர்த்தியாக மாற்றியது. மங்காத்தா திரைப்படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாலும், ஆரம்பம் படம் தான் அவருக்கு 100 கோடி ரூபாய் வசூலை பெற்று தந்தது.

சூர்யா ஏழாம் அறிவு படத்திலும், விக்ரம் ஐ திரைப்படத்திலும் இந்த சாதனையை படைத்து விட்டனர். ஆனால் தனுஷிற்கு தான் இந்த சாதனையை படைக்க பல வருடங்கள் ஆனது. சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமே தனுசுக்கு இந்த புகழை தேடி தந்தது. சிம்புவுக்கு மாநாடு படமும், சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் திரைப்படமும், கார்த்திக்கு கைதி திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூலை கொடுத்தன. விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் தற்போது 70 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியுள்ள நிலையில், அவரும் இந்த பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்