- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படம் துவங்காமல் தாமதமாக இந்த நடிகை தான் காரணமா - தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில்...

விடாமுயற்சி படம் துவங்காமல் தாமதமாக இந்த நடிகை தான் காரணமா – தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இப்படியும் ஒரு டாக்

- Advertisement -

நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். ரஜினி -கமல் வரிசையில், விஜய் – அஜீத் என்ற ஜோடியாக, தமிழ் சினிமா ரசிகர்கள் இவர்கள் உளளனர். வலிமை, துணிவு படங்களுக்கு பிறகு, தனது 62 வது படமாக, விடாமுயற்சி என்ற படத்தில், அஜீத்குமார் நடிக்க தயாரானார். ஆனால், இதுவரை அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. எப்போது துவங்கும் என்றும் தெரியவில்லை.

அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய படங்கள் இரண்டுமே, ஒரே சமயத்தில்தான் ரிலீஸ் ஆனது. ஆனால் அதற்கு பிறகு விஜய் லியோ படத்தில் நடித்து முடித்த நிலையில், வரும் அக்டோபர் 19ம் தேதி, படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால், அஜீத் படம், விடாமுயற்சி என்ற தலைப்புடன் அப்படியே நின்று போயுள்ளது. படம் துவங்குவதற்கான எந்த முயற்சிக்கான அறிகுறிகளும் இதுவரை இல்லை.

இந்நிலையில், விடாமுயற்சி படம் துவங்காமல், நீண்ட கால தாமதம் நீடிப்பதற்கு இந்த நடிகையே காரணம் என்ற தகவல் பரவி வருகிறது. அதாவது, துணிவு படத்துக்கு பிறகு, அஜீத்குமார் நடிக்கும் ஏகே 62 படத்தை, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சந்தானத்திடமும் பேசப்பட்டு, ஒரு கோடி சம்பளம் எனவும் முடிவாகி உள்ளது. சந்தானத்திடம் அஜீத்குமாரே பேசி இருக்கிறார். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படம், சந்தானத்துக்கும் காமெடியில் கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, அஜீத்குமார் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இமேஜ் பலமடங்கு உயரும் என, நயன்தாரா மிகவும் சந்தோஷப்பட்டு இருக்கிறார். விக்னேஷ் சிவனும் மிகுந்த உற்சாகத்தில் இருந்திருக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் ஏகே 62 படத்தை, விக்னேஷ் சிவன் இயக்க வேண்டாம். எனக்கு கதை பிடிக்கவில்லை என்று அஜீத்குமார் நேரடியாக கூறிவிட்டார்.

இதனால் மனம் நொந்துபோன நயன்தாரா, சில படங்களில் அஜீத்குமார் ஜோடியாக அவர் நடித்திருக்கும் நட்பு முறையில் அஜீத்குமாரிடம் போனில் அழைத்து, விக்னேஷ் சிவனுக்கு, ஏகே 62 படத்தை இயக்க வாய்ப்பு தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு அஜீத்குமார் ஒத்துக்கொள்ளவில்லை.

மாஸ் ஹீரோவே தனது படத்தை இயக்க வேண்டாம் என விக்னேஷ் சிவனை வெளியேற்றிய பிறகு, இதுவரை மற்ற நடிகர்கள் யாரும் விக்னேஷ் சிவனுக்கு படம் இயக்கும் வாய்ப்பை தரவில்லை. இன்னும் அவர் அடுத்த படத்தை துவங்கவில்லை. இதனால் மனம் நொந்து போன நயன்தாராவின் சாபமோ, அல்லது ஒரு பெண்ணாக அவரது மன வருத்தமோ தான் அஜீத்குமாரின் விடாமுயற்சி படத்தை தொடங்க விடாமல் தடுக்கிறது என, சினிமா விமர்சகர்கள் சிலர் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

சற்று முன்