- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது சம்பளத்தில் புதிய வரைமுறையை கொண்டு வந்த நடிகர் எஸ்ஜே சூர்யா - ஹீரோவாக நடிக்க...

தனது சம்பளத்தில் புதிய வரைமுறையை கொண்டு வந்த நடிகர் எஸ்ஜே சூர்யா – ஹீரோவாக நடிக்க அழைத்தால், அவர்களுக்கு ஒரு சூப்பர் சலுகை

- Advertisement -

நடிகர் எஸ்ஜே சூர்யா, சமீபத்தில் வந்த மார்க் ஆண்டனி படத்தின் டைட்டிலில் நடிப்பு அரக்கன் என குறிப்பிடப்பட்டார். உண்மையிலேயே நடிப்பு அரக்கனாக இருந்து, அந்த படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றவர் எஸ்ஜே சூர்யா தான். இதை படம் பார்த்த அனைவருமே வெளிப்படையாக கூறி வருகின்றனர். அவரை தவிர வேறு யாராலும் அப்படி ஒரு காமெடி கலந்த வில்லன் நடிப்பை தருவதும் உடல்மொழி, டயலாக் டெலிவரியை கொண்டுவருவதும் சிரமம்தான்.

எஸ்ஜே சூர்யா, பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் நுழைந்தவர். ஓட்டலில் பணி செய்தவர். உதவி இயக்குநராக பணிசெய்து, பின் இயக்குநராக மாறியவர். அஜீத் நடித்த வாலி படமும், விஜய் நடித்த குஷி படமும் தான் அவரது சினிமா பயணத்தில், வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்த படங்கள். தொடர்ந்து நியூ, அன்பே ஆருயிரே படங்களில் வெற்றியை அடுத்த, வெற்றி நாயகனாக வலம் வந்த எஸ்ஜே சூர்யா, பின் அப்படியே பயணத்தில் சறுக்கினார். சில பிரச்னைகளில் சிக்கி, தமிழ் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் காணாமல் போனார்.

அதைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பின், அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கு ஸ்டார் மகேஷ் உடன் ஸ்பைடர் படம், விஜய் நடித்த மெர்சல், சிவகார்த்திகேயன் நடித்த டான் படங்களில் வில்லன் நடிப்பில் அசத்தினார். எலியால் பாதிக்கப்பட்ட மின்வாரிய அதிகாரியாக அவதிப்படும் கேரக்டரில் மான்செஸ்டர் படமும் ஹிட் ஆனது.

இந்நிலையில், இம்மாதம் 15ம் தேதி ரிலீஸ் ஆன ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படம், விஷால்தான் ஹீரோ என்றாலும், வில்லன் கேரக்டரில் நடித்த எஸ்ஜே சூர்யாவை தான் பலரும் ஹீரோவாக பார்க்கும் அளவுக்கு, அவரது கேரக்டர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, எஸ்ஜே சூர்யாவுக்கு அதிகளவில் படத்தில் நடிக்க அழைப்புகள் வரத் துவங்கி விட்டன. அடுத்தடுத்த பலரும் அழைப்பதால், தனது சம்பளத்தில் புதிய வரைமுறைகளை எஸ்ஜே சூர்யா அறிவித்துள்ளார். அதன்படி, மற்ற ஹீரோ நடிக்கும் படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க, படத்தின் பட்ஜெட் ரூ. 100 கோடி என்றால், அவரது சம்பளம் ரூ. 8 கோடி, இதுவே ரூ. 50 என்றால், அவரது சம்பளம் ரூ. 5 கோடி. எஸ்ஜே சூர்யா மட்டுமே ஹீரோவாக நடிக்கும் படம் என்றால், சம்பளமாக ரூ. 3 கோடி கொடுத்தால் போதும். அதாவது, தன்னை ஹீரோவாக நடிக்க அழைப்பவருக்கு இப்படி ஒரு சலுகை அறிவித்துள்ளார்.

அதாவது படத்தின் பட்ஜெட்டை பொறுத்து, பிற நடிகர்களின் படத்தில் நடிக்க, 100 கோடி ரூபாய் பட்ஜெட் எனில், ரூ. 8 கோடி, ரூ. 50 கோடி பட்ஜெட் என்றால் ரூ. 5 கோடி என, சம்பளத்தை குறைத்தவர், தன்னை ஹீரோவாக நடிக்க அழைத்தால் ரூ. 3 கோடி மட்டுமே கொடுத்தால் போதும் என அறிவித்திருப்பது, தனக்கான படங்களில் அவர் ஹீரோவாக நடிக்க விரும்புகிறார் என்பதையே காட்டுகிறது. அதே வேளையில், பிற நடிகர்கள் படம் எனில், அதில் ஆண்டி- ஹீரோ அதாவது வில்லன் கேரக்டர் என்பதால், சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் எஸ்ஜே சூர்யா என்பதும் இதில் தெளிவாக தெரிகிறது.

சற்று முன்