தமிழ் சினிமாவில், ரசிகர்களின் கவர்ந்த கதாநாயகிகள் பலருண்டு. ஆனால், சில நடிகைகள் மட்டுமே நீண்ட காலம், தமிழ் சினிமாவில் நீடித்திருக்கின்றனர். அப்படிபட்டவர்களில் ஒருவர்தான் நடிகை மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், சிறுமியாக அறிமுகமான மீனா, பின் எஜமான் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்து, தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறினார்.
கடந்த 1990களில், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்த மீனா ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்தி, அஜீத்குமார் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்தார். இப்போதும் தமிழ் படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். மலையாளத்திலும் மீனா தொடர்ந்து நடித்து வருகிறார்.
மீனாவின் மகள் நைனிகாவும் சிறுவயதிலேயே நடிகையாக மாறிவிட்டார், தெறி படத்தில் விஜய்க்கு மகளாகவும், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் அரவிந்த் சாமி மகளாகவும நடித்திருந்தார். அம்மா மீனாவை போலவே, அவரும் எதிர்காலத்தில் ஒரு நல்ல நடிகையாக வலம் வர வாய்ப்புள்ளது.
கடந்தாண்டில், நடிகை மீனாவின் கணவர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கும் மீனா இப்போது, மலையாளத்தில் மோகன்லால் உடன், த்ரிஷியம் 3 படப்பிடிப்பில், கலந்துகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் கலா ஒரு நேர்காணலில் நடிகை மீனா குறித்த திடுக்கிடும் சம்பவம் ஒன்றை கூறியிருக்கிறார். மீனா பிஸியான நடிகையாக இருந்த காலகட்டத்தில், ஐதராபாத்தில் ஒரு தெலுங்கு படப்பிடிப்பு நடந்தது. அந்த படத்தின் தயாரிப்பாளர் மகன்தான் ஹீரோ புதுமுகம். தண்ணீரில் மோட்டோர் போட்டில் சென்றபடி மீனா, ஹீரோவுடன் நடித்த ஒரு பாடல் காட்சி எடுத்தோம். அப்போ, எங்க போட்டுக்கும், அவங்க போட்டுக்கும் இடையில் இருந்த கயிறு அறுந்து விட்டது. அப்போது அந்த போட் வெகுதூரம் போய்விட்டது.
இதையறிந்த மீனாவின் அம்மா என்னை கண்டபடி திட்டுகிறார். எனக்கும் என்ன செய்வது என தெரியவில்லை. மீனா சென்ற பகுதி, மிருககாட்சி சாலையில் இருந்து புலிகளை திறந்துவிடும் ஆபத்தான காடாக இருந்தது, ஜூ திறந்து விட்டதாகவும் கூறினர். புலிகள் வரும் காட்டுக்குள் 4 மணி நேரமாக, புதுமுக ஹீரோவுடன் மீனா இருந்த நிலையில், நாங்கள் எல்லாம் பயந்து போய் விட்டோம். 12 மணிக்கு போன அவர்கள், சாயந்திரம் 4 மணிக்கு தான் பத்திரமாக திரும்பி வந்து சேர்ந்த பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது, என மறக்க முடியாத அனுபவமாக கூறியிருக்கிறார் கலா மாஸ்டர்.





