- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த வீடியோவில் எந்த விஷயமுமே இல்லையாமே - டீசர் மட்டும் காட்டிவிட்டு மெயின் பிக்சர் காட்டாமல்...

அந்த வீடியோவில் எந்த விஷயமுமே இல்லையாமே – டீசர் மட்டும் காட்டிவிட்டு மெயின் பிக்சர் காட்டாமல் ரசிகர்களை ஏமாற்றிய நெட்பிளிக்ஸ்

- Advertisement -

டயானா மரியா குரியன் என்ற பெயரில் இருந்த அவர், நயன்தாராவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மலையாளத்தில் அறிமுகமானார். அதன்பின், ஐயா படத்தில், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இயக்குநர் ஹரி இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஜோடியாக நடித்த நயன்தாரா, அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்தார்.

துவக்கத்தில் சாதாரண நடிகையாக அறிமுகமான நயன்தாரா, ஒரு கட்டத்தில் அவரே கதையின் நாயகியாக நடிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். ஹீரோக்களுக்கு இணையான ஒரு அந்தஸ்து அவருக்கு கிடைத்தது. அதேவேளையில் அவரது சொந்த வாழ்க்கை குறித்து பலவிதமான, கடுமையான விமர்சனங்களும் வந்துக்கொண்டே இருந்தன.

நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்த போது, படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட பழக்கம், காதலாகி இருவரும் கைகோர்த்தபடியே, எல்லா சினிமா விழாக்களுக்கும் வந்தனர். ஏழு ஆண்டுகள் வரை நீடித்த இந்த காதல், கடந்தாண்டில் ஒரு வழியாக திருமணத்தில் முடிந்தது.

அதுவரை இல்லாத ஒரு புரட்சியை விக்கி – நயன் ஜோடி தங்களது திருமணத்தில் செய்தது. அதாவது, சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் மிக விமரிசையாக நடந்தது. ஆனால், மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை. இயக்குநர் கவுதம் மேனன் தலைமையில், சினிமா படப்பிடிப்பு போலவே, இவரது திருமண நிகழ்வுகள், படம் பிடிக்கப்பட்டது. அந்நிய நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பாலிவுட் நடிகர், நடிகைகள், தமிழில் ரஜினிகாந்த் போன்ற விக்கி- நயனுக்கு மிகவும் தேவையான முக்கிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், குறிப்பிட்ட சில நடிகைகள் ஆகியோர் மட்டுமே அழைக்கப்பட்டு, அவர்களும் தலைக்கு முக்காடு போடாத குறையாத, மறைந்து மறைந்து வந்து இந்த திருமண விழாவில் கலந்துக்கொண்டனர்.

இந்த திருமண விழாவை, சீரும் சிறப்புமாக படம் பிடிக்க பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், விக்கி – நயன் திருமண விழாவை நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யவும் ரூ. 20 கோடி வரை பேசப்பட்டதாகவும் அப்போது பேசப்பட்டது. ஆனால், திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் இன்னும் அந்த வீடியோ வரவில்லை. இந்த வீடியோ பார்க்க பலரும் பணம் கட்டி சப்கிரைப்பர்களாக அந்த தளத்தில் சேர்ந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால், அந்த திருமண வீடியோவில், சுவாரசியமான நிகழ்வுகள் எதுவுமே இல்லையாம். அது ஒளிபரப்புவதற்கு எந்த முகாந்திரமும் வீடியோ காட்சியில் இல்லையாம். அதனால், அந்த வீடியோவை ஒளிபரப்பவே வேண்டாம் என, அந்த தளம் முடிவு செய்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதுபோல்தான் ஹன்சிகா மோத்வானி திருமணமும் வீடியோ எடுக்கப்பட்டு, ஓடிடி தளத்துக்கு தரப்பட்டுள்ளது. அதன் நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

சற்று முன்