- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நடிச்ச படத்தை தயவு செஞ்சு ரிலீஸ் பண்ணாதீங்க - படத்தின் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்த...

நான் நடிச்ச படத்தை தயவு செஞ்சு ரிலீஸ் பண்ணாதீங்க – படத்தின் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்த பிரபல ஹீரோ

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதும், அதில் நடித்து முன்னணி நடிகராக வெற்றி பெறுவதும் குதிரை கொம்பான விஷயமாக தான் இருக்கிறது. திறமை இருந்தும் பல புதுமுகங்கள் வாய்ப்பு கிடைக்காததால், இன்னும் சினிமா வெளிச்சத்துக்கே வராமல் இருக்கின்றனர். ஆனால், பிரபல ஹீரோ ஒருவர், தனது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என, அந்த படத்தின் தயாரிப்பாளரிடமே கோரிக்கை வைத்திருக்கிறார்.

ரேடியோ ஜாக்கியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆர்ஜே பாலாஜி. அவரது கிரிக்கெட் வர்ணனை, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது. நகைச்சுவை கலந்த அவரது படபடப்பான பேச்சை பலரும் ரசிக்கின்றனர். தமிழ் சினிமாவில் துவக்கத்தில், ஹீரோவின் நண்பனாக காமெடி நடிகராக நடித்த ஆர்ஜே பாலாஜி, எல்கேஜி படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

அதற்கு பிறகு மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், நானும் ரவுடிதான் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். படம் செம ஹிட் ஆனது. வயதான பெண்மணி, தாய்மை அடைந்தால் ஏற்படும் சிக்கல்களை மையப்படுத்திய வீட்ல விசேஷம் படமும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தின் துவக்கத்தில் இருந்தே இயக்குநர் கோகுலும், ஹீரோ ஆர்ஜே பாலாஜியும் கருத்து வேறுபாட்டால், அடிக்கடி சண்டையிட்டு கொண்டனர். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஒழுங்காக பட வேலைகளை கவனிக்கிறீர்களா, அல்லது படத்தை நிறுத்தி விடட்டுமா, என எச்சரித்த பிறகுதான், இருவரும் அடங்கி நடந்தனர்.

- Advertisement -

இந்நிலையில், படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, படம் சார்ந்த அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், படத்தின் முதல் பிரதி வந்திருக்கிறது. படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஹீரோ ஆர்ஜே பாலாஜியும் இருவரும் அப்படியே ஆடிப்போய் விட்டனர். அவர்கள் இருவரும் வாய்விட்டு கதறும் அளவுக்கு, படத்தை மிக மோசமாக எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் கோகுல்.

இதையடுத்து, சிங்கப்பூர் சலூன் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் பேசிய ஆர்ஜே பாலாஜி, தயவு செய்து இந்த படத்தை ரிலீஸ் செய்யாதீர்கள். இந்த படம் வந்தால், இதுவரை நான் பெற்ற வளர்ச்சி எல்லாம் போய், மறுபடியும் என் சினிமா வாழ்க்கையை ஆரம்பத்தில் இருந்து துவங்க வேண்டிய நிலை வரும். இந்த படத்துக்கு பதிலாக, மற்றொரு புதிய படத்தில் நான் சம்பளமே வாங்காமல் உங்கள் தயாரிப்பில் நடித்து தருகிறேன், என்று கூறியிருக்கிறார். இந்த கோரிக்கை குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இப்போது பரிசீலித்து வருகிறாராம்.

- Advertisement -

சற்று முன்