- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 170 பூஜை.. திருவனந்தபுரத்தில் கோலாகலமாக ஆரம்பித்தது ஷூட்டிங்.. யார் யார் வந்திருக்காங்க பாருங்க

தலைவர் 170 பூஜை.. திருவனந்தபுரத்தில் கோலாகலமாக ஆரம்பித்தது ஷூட்டிங்.. யார் யார் வந்திருக்காங்க பாருங்க

- Advertisement -

ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். ஞானவேலுவின் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினிகாந்த் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்திருக்கிறது ரசிகர்களிடம்.

லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். முதல் படம் போலவே இந்தப் படத்தையும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் ஞானவேல் இயக்குகிறாராம். மேலும் இதில் ஓய்வு காவல் துறை அதிகாரியாக தோன்றும் ரஜினிகாந்த் போலி என்கவுண்ட்டர்களுக்கு எதிராக வாள் சுழற்றும் கதைக்களம் என்று கூறுகின்றார்கள் கோடம்பாக்கத்தினர்.

படத்தில் ரஜினிக்கான லுக் டெஸ்ட் கடந்த மாதம் நடந்தது. இதனையடுத்து படத்தின் ஷூட்டிங் எங்கு தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த சூழலில் நேற்று ரஜினிகாந்த் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இது கருத்துள்ள பிரமாண்ட பொழுதுபோக்கு படமாக வரும்” என கூறியிருந்தார்.

இதற்கிடையே இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கின்றனர். படத்துக்கான பட்ஜெட் 160லிருந்து 180 கோடி ரூபாய்வரை என்று கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த்தின் சம்பளம் 135 கோடி ரூபாய் என்றும் அமிதாப்புக்கான சம்பளம் 15 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக நடிகர்களுக்கு மட்டுமே 145 கோடிவரை பட்ஜெட்டில் போய்விடுவதால் மீதம் இருக்கும் 30 கோடிதான் பட தயாரிப்புக்கு என தகவல்கள் கசிகின்றன.

ஞானவேலுவின் கதை எளிமையாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என்பதால் இந்த பட்ஜெட் போதுமென லைகா முடிவு செய்துவிட்டதுபோல. இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்துக்கு சென்றடைந்தார் ரஜினிகாந்த். அங்கு அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி முதலில் படத்தின் பூஜை திருவனந்தபுரத்திலேயே போடப்பட்டது. இந்த பூஜையில் ரஜினிகாந்த், ஞானவேலு, லைகா தமிழ்க்குமரன், மஞ்சுவாரியர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். திருவனந்தபுரத்தில் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்