- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்துல சித்தார்த் கேரக்டர்ல நடிக்க வேண்டியது இந்த நடிகரா? இப்படி ஒரு...

இந்தியன் 2 படத்துல சித்தார்த் கேரக்டர்ல நடிக்க வேண்டியது இந்த நடிகரா? இப்படி ஒரு சான்ஸை அவர் மிஸ் பண்ணிட்டாரே? – புலம்பி தீர்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களின் படங்களில் நடிப்பது என்பதே நடிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ஷ்ட வாய்ப்புதான். ஏனெனில், அவர்கள் படங்களில் நடிக்கும் போது, ஒரு படத்தில் நடித்தாலே, 10 படங்களில் நடித்த அனுபவங்களை பெற்றுவிட முடியும், தவிர, நிறைய விஷயங்களை அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். ஒரு நல்ல நடிகராக தங்களை வளர்த்துக்கொள்ள முடியும்.

அந்த வகையில் இயக்குனர் சிகரம் கே பாலசந்தர், இயக்குர் இமயம் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், ஸ்ரீதர், மணிரத்னம், ஷங்கர், பாலா, வெற்றிமாறன், அமீர், சேரன் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஏனெனில் இவர்கள் எல்லாம் ஹீரோக்களை நம்பி படம் எடுக்காமல், கதையை நம்பி படம் எடுப்பவர்கள்.

- Advertisement -

அதனால் படத்தின் கதைக்கு தான் நாயகன் தேவையே தவிர, நடிகருக்கு என கமர்ஷியல் கதைகளை உருவாக்குவது இல்லை. கேஎஸ் ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ், நெல்சன், எச் வினோத், அட்லி, சுரேஷ் கிருஷ்ணா, கார்த்திக் சுப்பராஜ் போன்றவர்கள் கமர்ஷியன் டைரக்டர்களாக இருந்து, ஒரு நடிகரை திரையில் எப்படி காட்டி, அதிக வசூல் ஈட்டலாம் என்பதுதான் அவர்களது இலக்காக இருக்கும்.

ரஜினி, விஜய், அஜீத்குமார் போன்றவர்களுக்கு எப்போதுமே கமர்ஷியல் இயக்குனர்களை தான் ரொம்ப பிடிக்கும். ஏனெனில் அவர்கள் மக்களை நடிகராக சந்திப்பதில்லை. ஸ்டார்களாக மட்டுமே சந்திக்கிறார்கள். அவர்களை கொம்பாதி கொம்பனாக காட்டும் ஹீரோயிச கதைகளை மட்டுமே இந்த கமர்ஷியல் டைரக்டர்கள் உருவாக்குவார்கள். அதுதான் ஜெயிலர், பேட்ட, லியோ, பீஸ்ட், விடாமுயற்சி போன்ற படங்களாக ரசிகர்ளுக்கு கிடைக்கும்.

- Advertisement -

இந்நிலையில், 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் வெற்றிக்கு பிறகு, 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியன் 2 படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். கமலும் பல வேடங்களில் வந்து மிரட்டுகிறார். இந்த வேடங்களை பார்த்து சிக்கன் ரைஸ் தாத்தா, பஜன்லால் சேட், பயில்வான் ரங்கநாதன், நடிகர் பிரசாந்த் அப்பா தியாகராஜன் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.

இந்த படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கேரக்டரில் நடிக்க முதலில் ஷங்கர் முடிவு செய்தது நடிகர் சிவகார்த்திகேயனை தான். ஆனால், அவரது கால்ஷீட் கிடைக்காத சூழலில், அந்த கேரக்டரில் சித்தார்த் நடித்ததாக கூறப்படுகிறது. ஷங்கர் போன்ற ஒரு இயக்குனரின் படத்தில் நடிப்பது, அதுவும் கமலுடன் நடிப்பது சிறந்த வாய்ப்பு. அதை எப்படி சிவகார்த்திகேயன் நழுவ விட்டார் என்று அவரது ரசிகர்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்