- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு நோ சொல்ல தெரியாது, முயற்சி செஞ்சாலும் எனக்கு நோ சொல்ல வரலை - கவர்ச்சியில்...

எனக்கு நோ சொல்ல தெரியாது, முயற்சி செஞ்சாலும் எனக்கு நோ சொல்ல வரலை – கவர்ச்சியில் உச்சம் தொட்ட பிரபல நடிகை ஓபன் டாக்

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளின் காலம் என்று ஒன்று இருந்தது. அவர்களது கவர்ச்சி நடனம், அதாவது காபரே டான்ஸ் இல்லாமல் கடந்த 1980, 90களில் ஒரு படம் கூட இருக்காது. வில்லன் பங்களாவிலோ அல்லது ஸ்டார் ஒட்டலிலோ வண்ண விளக்குகளுக்கு மத்தியில், ஜிகினா உடையில், தலையில் கோழி இறகும் வைத்தபடி ஒரு காபரே டான்ஸ் நிச்சயம் இருக்கும்.

அனுராதா, சிஐடி சகுந்தலா, குயிலி, சில்க் ஸ்மிதா போன்றவர்களில் காபரே நடனம் பார்க்க, பார்க்க ரசிகர்களின் விசில் சத்தம் பறக்கும். அந்த வகையில், கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் 1990 களில் கலக்கியவர் தான் ஷகிலா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில், இவர் நடித்த கவர்ச்சி படங்களை பார்த்து, மனம் சொக்கிப் போன ரசிகர்கள் ஏராளம்.

குறிப்பாக, ஷகிலா நடித்த மலையாள படங்களுக்கு கேரளாவில் செம மாஸ் வரவேற்பு இருந்தது. மோகன்லால், மம்முட்டி படங்களை விட, ஷகிலா படம் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு, கவர்ச்சியில் ரசிகர்களிடம் உச்சம் தொட்ட கவர்ச்சியை காட்டி, முத்திரை பதித்தவர்தான் நடிகை ஷகிலா.

ஷகிலா, தமிழ் சினிமாவில் துவக்கத்தில் துணை நடிகராக ஒருவராக தான் அறிமுகமானார். பிரபு ஹீரோவாக நடித்த ஒரு படத்தில், கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷகிலா. என்னது வயசுக்கு வரலையா, இனி வந்தா என்ன, வராட்டி என்ன என்ற கவுண்டமணியின் பஞ்ச் டயலாக், சினிமா ரசிகர்களின் டிரண்டிங் வசனமாக இன்றும் இருக்கிறது.

முதுமை காரணமாக, கவர்ச்சி படங்களில் நடிப்பதை தவிர்த்து இப்போது டிவி ஷோக்களில் மட்டுமே பங்கேற்று வரும் மாஜி கவர்ச்சி நடிகை ஷகிலா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சினிமா நடிகர்கள் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது. பணம் நிறைய சேர்த்து வைத்து என்ன செய்ய முடியும். நாளைக்கு ஒடம்புக்கு சரியில்லை என்றால், அரசு மருத்துவமனையில் பார்க்க கூடாதா, பிரைவேட் ஹாஸ்பிடலில் மட்டும்தான் சிகிச்சை பெற வேண்டுமா, அப்பல்லோ மருத்துவமனையில் பெட்டே இல்லை என்றால், அரசு மருத்துவனைக்கு போய் படுத்துதான் ஆக வேண்டும்.

எதுக்கு நோ சொல்லணுமோ அதற்கு நோ சொல்லி ஆகணும். என்னிடம் நோ சொல்லி பழகுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், அது கேட்க நல்லா இருந்தது. ஆனா, எனக்கு நோ சொல்ல தெரியாது. எனக்கு நோ சொல்ல வராது. என்ஓ என்ற சொல் எனக்கு வரவே மாட்டீங்குது. ஏன் நோ சொல்லணும். ஆண்டவன் நிறையா கொடுக்கறாரே, பேங்க்ல வெச்சு சேர்த்தி வெச்சு என்ன பண்ண போகிறோம். ஒருவரது சாப்பாட்டை பத்து பேர் பிரித்து சாப்பிடலாம். ஆனால், பத்து பேர் சாப்பாட்டை ஒருவர் சாப்பிட முடியாது. அதனால், மற்றவர்களுக்கு தருவது எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறி இருக்கிறார் நடிகை ஷகிலா.

சற்று முன்