தமிழ் சினிமாவை பொருத்த வரை ஒரு படத்தின் வெற்றிதான், அடுத்தடுத்த படங்களை உருவாக்க காரணமாகிறது. தொடர்ந்து தோல்வி படங்களை தந்த நடிகர்கள், இயக்குநர்கள் ஓரம்கட்டப்படுவார்கள். தயாரிப்பாளர்களை அவர்களை நிச்சயமாக புறக்கணிக்க வேண்டிய சூழல்தான் ஏற்படும். படம் வெற்றிதான், மீண்டும் படங்களை உருவாக்கும் முனைப்பை தரும்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை, சில நடிகர்கள் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்க காரணம், அவர்கள் படம் தரும் அபார வெற்றிதான். தொடர் வெற்றிகளால்தான் அவர்களது சம்பளமும் கோடிக்கணக்கில் உயர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஓடுகிற குதிரை மீதுதான் பணம் கட்டுவார்கள் என்பதை போல, வெற்றி படம் கொடுக்கிற நடிகர்களுக்கு தான் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மவுசு இருந்துக்கொண்டே இருக்கும்.
தமிழ் சினிமாவில் அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் நிறைய படங்கள் இயக்கப்பட்டு வெளிவந்து இருக்கின்றன. அவை வெற்றிப் படங்களாகவும் அமைந்திருக்கின்றன. பூந்தோட்ட காவல்காரன், சார்லி சாப்ளின் 2, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் அம்மா கிரியேஷன்ஸ் டி, சிவா. இவர்கள் படங்கள் தயாரிப்பது மட்டுமின்றி, பல படங்களில் ஒரு நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்திய ஒரு நேர்காணலில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சிவா கூறியதாவது, தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிப் படங்கள் வந்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சினிமாத்துறை நன்றாக இருக்கும். இன்னும் பல வளர்ச்சிகளை காண முடியும். லியோ படத்தை பொருத்தவரை, படம் ரிலீஸ் ஆன உடனே, 100 கோடி ரூபாய் என்ற வசூலை மிக எளிதாக கடந்துவிடும் என்று நினைக்கிறேன்.
பெயிலியர் படங்களில் கூட அதிக லாபம் தந்த வருமானத்தை படங்கள் என்றால், அது ரஜினிகாந்த் படங்கள்தான். படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெறாவிட்டால், படத்தின் வசூல், தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்காது. அதே போல், விஜய் படங்களும் அந்த வரிசையில், பெயிலியர் படங்கள் எனக் கூறப்படும் படங்களில் கூட அதிக லாபம் கிடைத்திருக்கிறது. ரஜினி, விஜய் படங்கள் பெயிலியர் ஆனாலும், அவர்கள் தோற்பதில்லை.
லியோ படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கிற அதிகப்படியான எதிர்பார்ப்பும், படம் ரிலீஸ் ஆகிற நேரம், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களாக வருவதால் படம் மிக எளிதாக 100 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிடும். இப்படி எல்லா படங்களுமே தமிழ் சினிமாவில் ஓட வேண்டும் என்பதுதான், என்னுடைய ஆசை என்று கூறி இருக்கிறார் தயாரிப்பாளர் சிவா.





