- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடிச்சாரு பாருங்க அந்தர் பல்டி, ஆக்‌ஷன் பட டைரக்டருன்னு நிரூபிச்சுட்டாரு - லோகேஷ் கனகராஜ் உருட்டுறாரு...

அடிச்சாரு பாருங்க அந்தர் பல்டி, ஆக்‌ஷன் பட டைரக்டருன்னு நிரூபிச்சுட்டாரு – லோகேஷ் கனகராஜ் உருட்டுறாரு பாருங்க ஒரு உருட்டு – நீங்க வேற லெவல் ப்ரோ

- Advertisement -

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம்தான் லியோ. நடிகர் விஜய் நடித்த இந்த படத்துக்கு, ஆரம்பம் முதலே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், புதுப்புது அப்பேட்டுகள் வந்துக்கொண்டே இருந்தன.

அதே படத்தின் இயக்குநர் இயக்கிய பழைய படங்களின் தொடர்ச்சியாக சில விஷயங்களை அடுத்த படங்களில் கொடுத்தால், அதற்கு பெயர் எல்சியு என இவர்களே ஒரு புதிய டுபாக்கூர் முறையை உருவாக்கி, பெரிய பில்டப் கொடுத்துவிட்டனர். பழைய படத்தில் வரும் நடிகர் இதிலும் காட்டப்பட்டால் அதற்கு கேமியோ எனவும் இவர்களே பேசிக்கொண்டனர்.

- Advertisement -

இப்படி லியோ படத்தில் கைதி கார்த்தி வருகிறார், விக்ரம் கமல் வருகிறார், தனுஷ். ராம்சரண், சிலம்பரசன் என பலரது பெயரை உலாவ விட்டு ஏகப்பட்ட பில்டப் களை செய்துவிட்டு கடைசியில் படத்தில் எதையும் காட்டாமல், ரசிகர்களை மண்டை காய வைத்துவிட்டனர். அதிலும் குறிப்பாக நரபலி, இரட்டை பிள்ளைகளாக சகோதரி, சகோதரன், அர்ஜூன் மூன்று, நான்குமுறை சுட்ட பிறகும் உயிருடன் வரும் லியோ பல சொதப்பல்களை கொண்டிருந்தது லியோ படம்.

படத்துக்கு மோசமான விமர்சனங்களை வந்ததையடுத்து, இப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், படத்தில் இடைவேளைக்கு பிறகு, இருதயராஜ் கேரக்டரில் வரும் மன்சூர் அலிகான் லியோ பற்றி கூறுகிறார். அவர் சொல்லும் பிளாஷ்பேக் பொய்யானதாக கூட இருக்கலாம். அதை அவரே சொல்வதாக கூட இருக்கலாம் என்பதை, என்னுடைய பார்வையில் நான் சொல்கிறேன் என்று அவர் சொல்வதாக இருந்த வசனத்தை, ரசிகர்கள் யூகித்து விடுவார்களே என நீக்கி விட்டோம்.

- Advertisement -

இன்னும் இதில் சம்பந்தப்பட்ட லியோ, தனது பிளாஸ்பேக் குறித்து சொல்லவில்லை. அவர் சொல்வதுதான் உண்மையானதாக இருக்கும். அப்போதுதான் அந்த கேரக்டர் பற்றிய உண்மைகள் வெளிவரும் என கூறி இருக்கிறார். அதாவது, மன்சூர் அலிகான் சொல்லும் பிளாஸ்பேக் பொய்யானது, லியோ சொல்லும் பிளாஸ்பேக் தான் உண்மையானது என்கிறார்.

அப்படி என்றால், நரபலி என்ற அபத்தமான ஒரு சப்ஜெக்டை கொண்டு வந்து ஏன் பிளாஸ்பேக் காட்ட வேண்டும். வேறு விதமாக கூட அதை சொல்லி இருக்கலாம். உண்மையில் இதையே பிளாஸ்பேக் ஆக எடுத்துவிட்டு, ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனம் கிளம்பியதால், விழித்துக்கொண்ட இயக்குநர், லியோ 2ம் பாகத்தில் வேறுவிதமாக பிளாஸ்பேக் காட்ட பிளான் போட்டு விட்டார். அதற்காக, இப்போது மன்சூர் அலிகான் சொல்லும் பிளாஸ்பேக் பொய் என்ற ஒரு அந்தர்பல்டி அடித்திருக்கிறார் என்கின்றனர் விவரமான ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்