- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா நடித்த கங்குவா படத்தில் கேமியோ ரோலில் வரும் பிரபல நடிகர் யார் தெரியுமா? -...

சூர்யா நடித்த கங்குவா படத்தில் கேமியோ ரோலில் வரும் பிரபல நடிகர் யார் தெரியுமா? – அட அசத்தறாங்களே… ஆனா இனிமே கேமியோ இல்லாம படமே வராது போல இருக்கே…?

- Advertisement -

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை. கடைசியாக அவரது ஜெய்பீம், சூரரைப் போற்று படங்கள் மட்டுமே, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன.

சினிமாவை பொருத்த வரை சில படங்கள் தோற்பதும், அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெறுவதும் சகஜமானதுதான் என்றாலும், தொடர்ந்து தோல்வி என்பது பெரிய அளவில் மார்க்கெட்டை பாதிக்கும். அதுவும் இப்போதுள்ள சினிமா சூழ்நிலையில், தொடர் வெற்றிகளால் மட்டுமே மார்க்கெட்டில் நிலையான இடத்தை பிடிக்க முடியும். இமேஜ் சரிந்து விட்டால், மீட்டெடுப்பது கஷ்டம்.

இன்றைய சூழலில் நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, சூர்யா, ஆர்யா, அதர்வா போன்றவர்கள் இழந்த இமேஜை மீட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர். நல்ல நடிகர்களாக வெற்றிப்படங்களை கொடுத்த அவர்களால் இப்போது மீண்டும் பழையபடி அதகளமான வெற்றிப்படங்களை தர முடியவில்லை. இது சினிமாவில் அவர்களது போராட்ட நேரமாக இருந்து வருகிறது.

ஆனால் விஜய் சேதுபதியும் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் தொடர்ந்து தோல்வி படங்களால் துவண்டு போயிருந்த நிலையில், அவரது 50வது படம் மகாராஜா மிகப்பெரிய திருப்புமுனையாக அவருக்கு அமைந்துவிட்டது. இப்போது விடுதலை 2, ட்ரெயின் படங்களும் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை மிகப்பெரிய அளவில் நம்பியிருக்கிறார். இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திஷா பாட்னி, வில்லனாக பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் பிறந்த நாளான நாளை, இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளிவர இருக்கிறது.

இதற்கிடையே கங்குவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் கேமியோ ரோலில், சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில், சூர்யா கேமியோ ரோலில் வந்திருந்தார். அதே போல் தனது அண்ணன் சூர்யாவுக்காக கங்குவா படத்தில் தம்பி கார்த்தி நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இது கார்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

சற்று முன்