- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலக நாயகன் கமலுக்கே போட்டியா? 11 வேடங்களில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர், இந்த விஷப்...

உலக நாயகன் கமலுக்கே போட்டியா? 11 வேடங்களில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர், இந்த விஷப் பரிட்சை தேவையா என கலாய்க்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வழக்கமாக ஹீரோக்கள் இரட்டை வேடங்களில் நடிப்பார்கள். பெரும்பாலும் அப்பா மகன் அல்லது அண்ணன் தம்பி என இரண்டு விதமான தோற்றத்தில் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதுதான் வழக்கம். இப்படி எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ரஜினி கமல் அஜீத்குமார் விஜயகாந்த் என பல படங்களில் நடித்து அந்த படங்கள் பெரிய ஹிட் ஆகியிருக்கின்றன.

அதிலும் நடிகர் கமல்ஹாசன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் 3 வேடங்களிலும் மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்திருந்தார். அதேபோல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமா நடிகரும் பத்து வேடங்களில் ஒரு படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதிகபட்சமாக பல படங்களில் ஹீரோக்கள் இரண்டு வேடங்களில் நடிப்பது வழக்கம். ஓரிரு படங்களில் மூன்று வேடங்களிலும் நடித்திருப்பார்கள். அதுதான் வழக்கமாக நடந்துள்ளது. இந்நிலையில் நடிகர் யோகி பாபு ஒரு புதிய படத்தில் 11 வேடங்களில் நடிப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆர். கிஷோர் குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 9 லைட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகர்கள் யோகி பாபு அதிதி ரவி ரெடின் கிங்ஸ்லி விடிவி கணேஷ் பஞ்சு சுப்பு ஏ வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு படத்தின் நாயகன் என்பது மட்டுமின்றி வில்லன் கேரக்டரிலும் அவரே நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படம் காமெடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து கென்யா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் கிஷோர் குமார் கூறியதாவது, பரபரப்பான காமெடி ஆக்சன் திரில்லரான இந்த படத்தில் நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 கதாபாத்திரங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார்.

இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். அதுமட்டும் இன்றி பல்வேறு மொழிகளை பேசியும் அவர் நடிக்கிறார். மிகவும் சவாலான இந்த படத்துக்காக கடும் உழைப்பை அவர் வழங்கி வருகிறார் என்று இயக்குனர் ஆர் கிஷோர குமார் கூறியிருக்கிறார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். நடிகர் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தவர். இப்போது 11 வேடங்களில் நடிகர் யோகி பாபு நடிப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. எதற்கு இந்த விஷ பரிட்சை என்றும் யோகி பாபுவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்