- Advertisement -
Homeபொழுதுபோக்குசியான் விக்ரம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. தங்கலான் டீசர் எப்போ தெரியுமா?.. இதோ லேட்டஸ்ட் அப்டேட்

சியான் விக்ரம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. தங்கலான் டீசர் எப்போ தெரியுமா?.. இதோ லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல போராட்டங்களை கடந்து கோலிவுட்டில் வென்ற அவருக்கு பெரும்பாலும் ஹேட்டர்ஸ் இல்லை. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் விக்ரமும் கடந்த சில வருடங்களாகவே சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் எதுவும் கிடைக்கவில்லை.

அவர் நடித்த கோப்ரா படம் படுதோல்வியடைய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தார். அந்தப் படம் ஹிட்டானாலும் அது மல்டி ஸ்டாரர் படம் என்பதால் அந்தப் படத்தின் வெற்றி விக்ரமுக்கு மட்டும் சொந்தமாகவில்லை. எனவே அவர் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற வேட்கையில் மீண்டும் தீவிரமாக உழைக்க ஆரம்பித்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் விக்ரம் பா.இரஞ்சித்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். விக்ரமுடன் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க வயலில் தமிழர்கள் பட்ட இன்னல்களை பற்றி படம் பேசுகிறது.

இரஞ்சித் முதன்முறையாக பீரியட் படம் எடுப்பதாலும் கேஜிஎஃப்பை தொட்டிருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதிலும் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப்போயினர். கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் என இப்போது அறுதியிட்டு கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி படமானது அடுத்த வருடம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் டீசர் இன்னும் சில நாட்களில் ரிலீஸாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் டீசர் எப்போது ரிலீஸாகும் என்ற அப்டேட்டும் வெளியாகியிருக்கிறது. அதன்படி தங்கலான் டீசரானது நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என போஸ்டருடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் போஸ்டரில் விக்ரம் ரத்த ஆற்றில் குதிரையில் வருவது போல் இருக்கிறார். தற்போது அந்தப் போஸ்டரும் ட்ரெண்டாகியுள்ளது. இந்தப் படத்துக்கு பிறகு விக்ரம் சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுதொடர்பான அறிவிப்பும் சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது.

- Advertisement -

சற்று முன்