- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 டிரெய்லர் படைத்த சாதனை, இதுவரை பார்வையாளர் எண்ணிக்கை எத்தனை கோடிகள் தெரியுமா?...

புஷ்பா 2 டிரெய்லர் படைத்த சாதனை, இதுவரை பார்வையாளர் எண்ணிக்கை எத்தனை கோடிகள் தெரியுமா? புஷ்பான்னா பிராண்டுன்னு சொல்லி சொல்லி அடிக்கறாங்கப்பா!

- Advertisement -

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக அசத்திக் கொண்டிருப்பவர் நடிகர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா தி ரைஸ், பான் இந்தியா படமாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. புஷ்பா படத்தின் 2ம் பாகமாக புஷ்பா 2 தி ரூல் படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

புஷ்பா 2 தி ரூல் படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

- Advertisement -

புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் காட்சிகள் புஷ்பா முதல் பாகத்தின் தொடர்ச்சியாக செம்மர கடத்தலில் அடுத்தடுத்த லெவலில் அல்லு அர்ஜூனின் அதிரடி ஆட்டம், போலீஸ் அதிகாரி கேரக்டரில் வில்லனாக வரும் பகத் பாசிலின் எதிரி ஆட்டம் என டிரெய்லரே தரமான சம்பவமாக இருக்கிறது.

புஷ்பா தி ரைஸ் படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா ஐட்டம் பாடல் போலவே, புஷ்பா 2 படத்தில் வரும் இந்த ஐட்டம் பாடலும், குத்தாட்டமும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த படம் 11000 திரைகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் புஷ்பா 2 தி ரூல் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து புஷ்பா 2 டிரெய்லர் மக்களிடையே பலத்த வரவேற்பை, ஆரவாரமான உற்சாகத்தை பெற்றிருக்கிறது. குறிப்பாக புஷ்பாங்கறது பேர் இல்லே, புஷ்பான்னா பிராண்டு என்ற டயலாக் வெறித்தனமாக இருக்கிறது.

நேற்று முன் தினம் 17ம் தேதி மாலை வெளியான புஷ்பா 2 டிரெய்லர் யூடியூப் தளத்தில் இதுவரை 12 கோடி பார்வைகளை கடந்துள்ளது. டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 10.2 கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. அதாவது, இந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற 3வது டிரெய்லர் என்ற பெருமையை புஷ்பா 2 படம் பெற்றுள்ளது. 11.3 கோடி பார்வைகளுடன் சலார் திரைப்படத்தின் ட்ரெய்லர் முதல் இடத்திலும், 10.6 கோடி பார்வைகளுடன் கேஜிஎப் 2 டிரெய்லர் 2ம் இடத்திலும் உள்ளது.

- Advertisement -

சற்று முன்