- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளரிடம் இயக்குநர் சொன்ன புகார், இயக்குநர் மீது நடிகர் புகார் - லால் சலாம்...

தயாரிப்பாளரிடம் இயக்குநர் சொன்ன புகார், இயக்குநர் மீது நடிகர் புகார் – லால் சலாம் படம் தோல்வியில் இப்படி ஒரு காமெடி பஞ்சாயத்து ஓடுதே…?

- Advertisement -

சமீபத்தில் திரைக்கு வந்த படம் லால் சலாம். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில், ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்திருந்தனர். தன்யா பாலகிருஷ்ணன், தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களை ஏற்று இருந்தனர்.

மத நல்லிணக்கம், கிரிக்கெட், மொய்தீன் பாய் கேரக்டர், ஏஆர் ரகுமான் இசை, ரஜினி கேமியோ ரோலில் 45 நிமிடங்கள் என பல பில்டப்புகள் செய்யப்பட்ட இந்த படத்தின் முதல் நாள் ரிலீஸ் அன்று, தமிழகம் முழுவதும் ஒரு தியேட்டரில் கூட ஹவுஸ்புல் ஆகவில்லை என்ற தகவல் இப்போதுதான் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி ரஜினி நடித்த இந்த படத்தை பார்க்க ரஜினி ரசிகர்களே வரவில்லை என்பதுதான் இதில் கசப்பான உண்மை. படம் பார்க்கச் சென்ற பலரும் வெளியே வந்து சொன்ன ஒரே ரிசல்ட்., படம் முழுக்க தத்துவமா பேசி கொல்றாங்கப்பா, டாகுமென்டரி படம் பார்க்கற மாதிரி இருக்கு. ஏஆர் ரகுமான் இசை ஒரு பாட்டு கூட தேறவில்லை என்பதுதான்.

இந்நிலையில், இந்த லால் சலாம் படம் ஓடாடதற்கு காரணம் என்னவென்று, அந்த படத்தின் டைரக்டர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கண்டுபிடித்து விட்டார். அதாவது, லால் சலாம் குறித்து இன்னும் மக்கள் மத்தியில் நன்றாக விளம்பரம் செய்திருக்க வேண்டும். அதை லைக்கா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் செய்யவில்லை என, லைகா புரடக்சன் தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் போன் செய்து பொரிந்து தள்ளி இருக்கிறார். ஆனால் லால் சலாம் படம் பார்க்காத அவரும், ஐஸ்வர்யா பேச்சை நம்பி சென்னையில் உள்ள பொறுப்பாளர்களை கூப்பிட்டு திட்டி இருக்கிறார்.

- Advertisement -

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல, இப்படி ஒரு மொக்கை படத்தை எடுத்துவிட்டு, விளம்பரம் செய்யாததால் ஓடவில்லை என்று ஐஸ்வர்யா ஒருபுறம் காமெடி செய்துக்கொண்டு இருக்க, மறுபுறம் இந்த படத்தில் நடித்த நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் ஐஸ்வர்யா மீது புகார் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

அதாவது, லால் சலாம் படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட்டுக்கு பதிலாக 90 நாட்கள் தன்னிடம் கால்ஷீட் வாங்கி தனது நேரத்தை வீணடித்து விட்டதாகவும், இதனால் தனது சினிமா கேரியர் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் பலரிடம் புகார் கூறி வருகிறார். ஆனால் நடிகர் அதர்வா நடிக்க வேண்டிய அந்த கேரக்டரில், சில முக்கிய புள்ளிகளின் சிபாரிசு காரணமாக லால் சலாம் படத்துக்குள் வந்தவர்தான் விஷ்ணு விஷால். இப்போது ரஜினியுடன் நடித்த பிறகு பெரிய பில்டப்பு செய்கிறார் என்று இப்படி லால் சலாம் படத்தை வைத்து காமெடி பஞ்சாயத்து ஓடுகிறது.

- Advertisement -

சற்று முன்