- Advertisement -
Homeபொழுதுபோக்கு30 ஆண்டுகளுக்கு முந்தைய படம் ரி ரிலீஸ் - கொட்டும் மழையில் காத்திருந்து, படிக்கட்டுகளில் அமர்ந்து...

30 ஆண்டுகளுக்கு முந்தைய படம் ரி ரிலீஸ் – கொட்டும் மழையில் காத்திருந்து, படிக்கட்டுகளில் அமர்ந்து படம் பார்த்த ரசிகர் கூட்டம் – இது வேற லெவல் படம் ப்ரோ

- Advertisement -

சினிமா ரசிகர்களை பொருத்த வரை, நல்ல படங்களை அவர்கள் வரவேற்கவோ, வெற்றி பெறச் செய்யவோ தயங்குவதே இல்லை. ஒரு நல்ல படம், அதன் வெற்றியை அதுவே தேடிக் கொள்ளும். அதற்காக மற்றவர்கள் எந்த முயற்சியும் எடுக்க வேண்டியது இல்லை என்று சொல்லப்படுவதுண்டு.

அப்படித்தான் பல படங்கள் இப்போதும் நிலைத்து நிற்கின்றன. தமிழ் சினிமாவை பொருத்த வரை எம்ஜிஆர் காலம் தொட்டு இன்றைய விஜய் காலம் வரை, ஹீரோயிசம் நிறைந்த படங்கள் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. கதாநாயகனை முக்கியத்துவப்படுத்தும் திரைக்கதைகளே அதிகமாக படமாக்கப்படுகின்றன.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம், ரசிகர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு நடிகர் நடிக்கும் சினிமாவை விட்டு விட்டு, நடிகரை தங்கள் அபிமான வாழ்க்கை நாயகனாக கொண்டாடத் துவங்கி விடுகின்றனர். அதனால், இயக்குநர் விரும்பும் கதைகளுக்கு பதிலாக, ரசிகர்கள் விரும்பும் கதைகளில் நடிகர்கள் நடிப்பது அதிகரித்து விட்டது.

ஆனால், மலையாள சினிமாவை பொருத்த வரை அங்கு கதைக்கு தான் முக்கியத்துவம். கதாநாயகன் படத்தின் ஹீரோ தானே தவிர, ரசிகர்கள் நடிகர்கள் பெரிதாக கொண்டாட மாட்டார்கள். தியேட்டர் ஹவுஸ்புல் என்றால், ரசிகர்கள் வீட்டுக்கு திரும்பி செல்வார்களே தவிர, பிளாக் டிக்கெட் எல்லாம் வாங்கும் பழக்கமே கிடையாது.

- Advertisement -

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், 1993ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த படம் மணிச்சித்ரதாழ். இந்த படத்தை இயக்கியவர் பாசில். மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா நடித்த இந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. புகழ்பெற்ற படமாக தேசிய விருதும், சிறந்த நடிகை ஷோபனாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தின் கதையை தழுவி தான் ரஜினி, பிரபு, ஜோதிகா நடிப்பில் சந்திரமுகி என்ற பெயரில், தமிழில் வந்தது. இதில் மோகன்லால் கேரக்டரில், தமிழில் ரஜினி நடித்திருந்தார்.

கேரளாவில், கேரள மாநில அரசு சார்பில் இப்போது கேரளியம் 2023 கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பழைய படங்கள், கிளாசிக் படங்களாக ரி ரிலீஸ் செய்யப்படுகின்றன. அதில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு மணிச்சித்ரதாழ் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. கொட்டும் மழையில் ரசிகர்கள் பெருங்கூட்டம் காத்திருந்தது. அதனால், மீண்டும் இரவு 9.15 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது. தியேட்டர்களில் படிக்கட்டுகளில் அமர்ந்து இந்த படத்தை பார்த்து, மலையாள ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்