- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பாட்டுல அந்த 1200 பேர் ஆடறாங்களா இல்லே கையை மட்டும் ஆட்டறாங்களா, இதுக்கு எதுக்கப்பா...

விஜய் பாட்டுல அந்த 1200 பேர் ஆடறாங்களா இல்லே கையை மட்டும் ஆட்டறாங்களா, இதுக்கு எதுக்கப்பா இத்தனை அலப்பரை – தாங்க முடியலை சாமி

- Advertisement -

லியோ படம் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பு, ஒரு பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருந்தது. அது, லியோ படத்தில் விஜய் நடித்த ஒரு பாடல் காட்சியில் நடனமாடிய கலைஞர்களுக்கு சம்பளம் வரவில்லை என்பதுதான். இதில் தினேஷ் மாஸ்டர் 20 லட்சம் ரூபாய் வரை வாங்கிக்கொண்டதாகவும் ஒரு வதந்தி கிளம்பி, பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, விஜய் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய 1000 பேருக்கு சம்பளமே தரவில்லை என்றனர். பின்பு, டான்ஸ் யூனியன் அசோசியேஷன் சார்ந்தவர்களுக்கு தினமும் சம்பளம், பேட்டாவுடன் 5 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாகவும், தங்களுக்கு ரூ. ஆயிரம் மட்டுமே தினசரி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் பின்னர், புகார் தெரிவித்தனர்.

- Advertisement -

அதனால், அவர்களை போலவே எங்களுக்கும் சம்பளத்தை தினமும் 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்றும், டான்ஸ் யூனியன் சாராத நடனக்கலைஞர்கள் புகார் தெரிவித்தனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி என, பிற மாவட்டங்களில் இருந்து வந்து 10 நாட்கள் வரை இந்த பாடல் காட்சிக்காக நடனமாட வந்ததாகவும், பல்வேறு சிரமங்களை சந்தித்ததாகவும் புகார் தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில், லியோ இசை வெளியீட்டு விழா நடக்கும் நேரு இன்டோர் ஸ்டேடியம் முன்பு, போராட்டம் நடத்தி கோஷம் எழுப்பவும் அவர்கள் திட்டமிட்டதாகவும் பரபரப்பான தகவல் பரவியது. லியோ இசை வெளியீட்டு விழா இதனால் கூட ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு கோணத்தில் ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழவும் இது காரணமாக இருந்தது.

- Advertisement -

ஆனால், லியோ படம் இன்று வெளியான நிலையில், 1200 நடன கலைஞர்கள் பங்கேற்ற அந்த பாடல், பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. விஜய்க்கு பின்னால் இருந்த 1200 நடனக் கலைஞர்கள் உண்மையில் நடனம் ஆடுகிறார்களா, அல்லது கையை மட்டும் ஆட்டிக் கொண்டு இருக்கிறார்களா என்ற கேள்வி எழும் நிலையில்தான், அவர்களது பங்களிப்பு இருந்தது.

இப்படி ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆடியதற்காக, அந்த அமெச்சூர் நடனக் கலைஞர்கள் இவ்வளவு பில்டப் செய்தார்கள் என, படம் பார்த்த ரசிகர்களில் பலரும் வாய்விட்டே விமர்சனம் செய்து வருகின்றனர். அதே ஒரு வகையில், படத்தின் பிரமோசனுக்கு அவர்களது பிரச்னை என்ற பெயரிலான பங்களிப்பும் சிறப்பாக இருந்ததை மறுக்க முடியாது. அந்த வகையில், அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கலாம் என்றும், ரசிகர்கள் சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்